Untitled Document
May 9, 2024 [GMT]
 
பசலைக்கீரையும் ரத்தசோகையை தீர்க்கும!
[Wednesday 2016-01-13 19:00]

கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.


ஏன் நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள்?
[Wednesday 2016-01-13 07:00]

நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரியுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும். நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். நகங்களைக் கடிப்பதால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.


கடவுள் படைத்த பெண்ணும் தேவதையின் கேள்விகளும்!!
[Tuesday 2016-01-12 15:00]

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று,


இந்த ஆண்டு ஸ்மார்ட் கைபேசிகளில் வரவுள்ள 8 புதிய மாற்றங்கள்!
[Tuesday 2016-01-12 07:00]

கைத்தொலைபேசிகளின் வளர்ச்சி ஆண்டுதோறும் புதிய பரிணாமத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், 2015-ம் ஆண்டில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் காணப்பட்டன. குறிப்பாக, குறைந்த விலை மற்றும் மிட் ரேஞ்ச் போன்களின் வடிவமைப்பு, வேகத்திறன் ஆகியவைகள் மாறியிருந்தன. அதேபோல், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பின்வருமாறு..


அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான்!
[Monday 2016-01-11 18:00]

அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். சிலருக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனை மட்டும் செய்தால், ஒரு சில நேரங்களில் தெரியாது. ரத்தத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு யூரினரி இன்ஃப‌க்சன் என்பது பொதுவான பிரச்சனை. இதனால்கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். எனவே, ஒரு மருத்துவரை அணுகி, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


பெண்களது ரத்தச் சோகையை போக்கவல்லது வெல்லம்! - உடல் வெளுக்கும், நகமும் வெளுக்கும்!
[Monday 2016-01-11 11:00]

உலகப்பரப்பில் இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பருவப் பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம், உடல் வெளுக்கும், நகமும் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள். பனைவெல்லத்தைவிடவும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரண்டும் சேரும் போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.


வெறும் தரையில் படுக்க கூடாது என்பது ஏன் தெரிமா..?
[Monday 2016-01-11 07:00]

நம் உடலின் வெப்பநிலை 37


ஒன்பது விசயங்களை பின்பற்றினால் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெறலாம்:
[Sunday 2016-01-10 18:00]

ஆஸ்துமா ஒவ்வாமையால் தான் பெரும்பாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமாவை விரட்ட சில உணவுகளை தவிர்ப்பது அவசியம் என்கிறார்கள் வைத்திய நிபுனர்கள். அந்தவகையில் ஒன்பது விசயங்களை பின்பற்றனால் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டியவை:

1. குளீர் சாதனப் பெட்டியில் வைத்த எந்தப் பொருளையும் சாப்பிடக்கூடாது.

2. வாரம் ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

3. அவ்வப்போது குடல் சுத்தம் செய்தல் வேண்டும்.


முதுகு வலி பாதிப்பை தவிர்க்க சில வழிகள்:
[Saturday 2016-01-09 19:00]

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் முறைகளை பார்க்கலாம்.


நமது மூளையைப் பாதிக்க நாமே செய்யும் 10 கெடுதல்கல்!
[Friday 2016-01-08 00:00]

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


டெங்கு சிக்குன் குனியா - பரப்பும் கொசுக்களுக்கு பூக்கள் அதிகமாக பிடிக்குமாம்!
[Thursday 2016-01-07 18:00]

டெங்கு, சிக்குன் குனியா நோய் களைப் பரப்பும் கொசுக்கள் பூக்கள் நிறைந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் முட்டையிடுகின்றன என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க வேளாண் துறை, புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, ஏடீஸ் அல்போபிக்டஸ் வகை கொசுக்கள் மற்றும் அவை முட்டையிடும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பில் காப்மன், திமோதி டேவிஸ் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஏடீஸ் வகை கொசுக்கள், மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா ஆகியவற்றை பரப்புகின்றன. முட்டைகளை இடுவதற்காக கொசுக்களை பூக்கள் அதிகம் ஈர்ப்பது தெரியவந்துள்ளது. பட்டர்பிளை புஷ் வகை பூக்கள் உள்ள நீர்நிலைகளில் அதிக முட்டைகளை இட்டுள்ளன. இந்த ஆய்வு, கொசு உற்பத்தி யைக் கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.


அதிக வேலையால் முதுகு வலியா! - இதோ இலகுவான வழி பற்றிய காணொளி Top News
[Thursday 2016-01-07 18:00]

நவீன யுகத்தில் அநேகமானோர் கணினியில் வேலை செய்வதாலும், நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் பலருக்கு முதுகு வலி என்பது பெரிய பிரச்சனையே! முதுகு வலியை நீங்களே இலகுவான பயிற்சி மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால் முதுகு வலியின் போது கால்கல் விறைப்புத் தன்மையை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு உள்ள தனிச்சிறப்புகள்!:
[Wednesday 2016-01-06 18:00]

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..? மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?
[Tuesday 2016-01-05 19:00]

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.


உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா?
[Tuesday 2016-01-05 19:00]

Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன். முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது. உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும்.


புருவமுடிகளைத் திருத்துகிறோம் (THREADING)என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
[Tuesday 2016-01-05 08:00]

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு! புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.


குழந்தையின் அழுகைக்கான காரணத்தை கண்டறியும் மொபைல் ஆப் அறிமுகம்:
[Sunday 2016-01-03 09:00]

குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டறியும் புதிய மொபைல் ஆப் ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த 'ஆப்' குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.


போதி தர்மர் வாழ்க்கை வரலாறு.
[Saturday 2016-01-02 10:00]

போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன. போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.


தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்:
[Thursday 2015-12-31 08:00]

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்।

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.


பசி இல்லாத நேரத்தில் உணவு சாப்பிட்டவர்களின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகமாக உயர்கிறது!
[Wednesday 2015-12-30 23:00]

நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நேரம் என்பதை இங்கே 10 மணி என்றோ, 1 மணி என்றோ கருதாமல், பசித்த நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஆம், மதிய உணவு வேளை வந்து விட்டது என்பதற்காகவோ, உங்களுக்கு பிடித்தமான உணவு என்பதாலோ ஒரு உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடல் நலனை பாதிக்கும். பலரும், ருசியான உணவுப் பொருட்கள் கிடைத்ததும் சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால், அப்போது அவர்களுக்கு பசி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.


கலிபோர்னியா பேராசிரியர் கண்டபிடித்த பேப்பர் நுண்நோக்கி:
[Wednesday 2015-12-30 08:00]

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 மடங்கு பெரிதுபடுத்தமுடியும். அதற்கான மிகச்சிறிய லென்சையும் உருவாகியுள்ளார். அனைத்துமே பேப்பரால் ஆனது.


கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்:
[Monday 2015-12-28 20:00]

நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா