Untitled Document
April 26, 2024 [GMT]
புலிகளின் காலத்தில் 6 மில்லியன் ரூபா மோசடி! - ரவிகரன் மீது குற்றச்சாட்டு
[Saturday 2017-06-24 08:00]

முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கத்தின் 6 மில்லியன் ரூபா நிதியை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்  மோசடி செய்துள்ளதாகவும் அதனை திருப்பிச்செலுத்த வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் கையொப்பமிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கத்தின் 6 மில்லியன் ரூபா நிதியை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மோசடி செய்துள்ளதாகவும் அதனை திருப்பிச்செலுத்த வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் கையொப்பமிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  

குறித்த கடிதங்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் உட்பட்டோருக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த கடிதத்தில், முதலமைச்சர் தன்னுடைய சொந்த அமைச்சரவையிலேயே மோசடிகளை அடையாளங் கண்டு மோசடிக்காரர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கியதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றோம். அதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து தற்போது வடமாகாணசபை உறுப்பினராக இருக்கும் து.ரவிகரன் அவர்கள் 90 இலட்சம் ரூபாவினை மோசடி செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.

மக்கள் முன் பகிரங்கமாக நடந்த விசாரணையில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களால் 90 இலட்சம் ரூபாவினை மீளச் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. பணம் செலுத்தாததன் காரணத்தினால் ரவிகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஊரறிந்த, புலிகள் அறிந்த உண்மைச் சம்பவம். பின்னர் 30 இலட்சம் ரூபா மோசடி செய்த பணத்தினைச் செலுத்தி மீதிப் பணத்தினைச் செலுத்துவதற்கு கொழும்பு சென்றுவர வேண்டும் எனக் கூறி வன்னி மண்ணை விட்டு வெளியேறினார்.

வெளியேறிய போது பிள்ளையுடன் வெளியேறியவர் நீர்கொழும்பில் அமைந்துள்ள ஈபி.ஆர்.எல்.எவ் வரதராஜப்பெருமாள் காரியாலயத்தில் சரணடைந்தார். பின்னர் மோசடிப் பணத்துடன் இந்தியா சென்ற இவர் தனது பிள்ளைகளைத் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் இவர் விடுதலைப் புலிகளை ஏமாற்றியதால் வன்னியில் இருந்த தாதியரான இவரது மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பணத்தைச் செலுத்துமாறு கூறி அவரது மனைவியும் தடுத்துவைக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் சுகாதார சேவை சூரியகுமார் நேரடியாகத் தலையிட்டு ரவிகரனது மனைவி விடுவிக்கப்பட்டார். பின்னர் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர். ஒரு மாதகாலத்திற்கு மேலாக விடுதலைப் புலிகளின் சிறையிலிருந்த ரவிகரன் விடுதலைப் புலிகளை ஏமாற்றி வன்னியை விட்டு வெளியேறி மக்களின் பணத்தைச் சூறையாடிய ரவிகரன் இன்று தேசியம் பேசுவதை நம்பப்போகின்றீர்களா? இதில் ஒப்பமிடும் நாங்கள் அனைவரும் இவரது மோசடியை நேரடியாக அறிந்தவர்கள். மக்களோடு வன்னியில் இருந்தவர்கள். ஒரு விசாரணை என்று வரும்போது நேரடியாக வாக்குமூலம் தரத் தயாராக இருக்கின்றோம்.

எமது நோக்கம் மக்களின் பணம் அதாவது கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு சேர்ப்பிக்கப்பட வேண்டும். இன்று உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசம் இவரது கையாட்களாகும். எனவே எமக்கு ஒரு சந்தர்ப்பம் தருமிடத்து இவ்விடயம் தெரிந்த பொதுமக்கள், முன்னர் விசாரணை நடத்தியவர்கள் அக்காலப்பகுதியிலிருந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் அனைவரையும் சாட்சியத்துக்காக உங்கள் முன் நிறுத்தத் தயாராக இருக்கின்றோம்.

எனவே நீதியரசர் முதலமைச்சர் ஆகிய நீங்கள் இவ்விடயத்தில் முல்லை மாவட்ட மக்களின் பொது பண மோசடியை வெளிக்கொண்டு வராதவிடத்து அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்து உலகறியச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எனவே இப்பணத்தினை உரிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசத்திற்குக் கட்டிமுடிக்க ஆவன செய்ய வேண்டும் என்பதனைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா