Untitled Document
May 10, 2024 [GMT]
 
"திருமணமே வேண்டாம்" - விஜய் டிவி நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன காரணம்?
[Monday 2024-03-18 06:00]

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி. அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.


தமிழகத்தில் மட்டுமே வசூல் வேட்டை நடத்தியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ்!
[Monday 2024-03-18 06:00]

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்ரவரி 23ம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம், படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற குணா குகை செட் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது.


"கோட்" படத்துக்கு கலாநிதி மாறன் கொடுக்கும் குடைச்சல்!
[Sunday 2024-03-17 18:00]

தமிழகத்தில் திரும்பியபக்கமெல்லாம் தளபதிமயம் தான். விஜய் அரசியலில் கால் எடுத்து வைத்த காலத்திலிருந்து, அவரின் ஒவ்வொரு நகர்வுகளையும் திரைபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கவனித்து வருகின்றனர். லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் தளபதி, வெங்கட் பிரபுவின் கூட்டணியில் இணைந்துள்ள படமே “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT.


அம்பானியால் கேள்விக்குறியாகும் தமிழ் திரை உலகம்!
[Sunday 2024-03-17 18:00]

அருவி படத்தில் வரும் வசனத்தைப் போல், சமூகத்தில் இருக்கின்ற ஒரே விதி “பணம்”, பணம் இருக்கிறவர்கள் வலிமையானவர்கள். வலிமையானவர் வகுத்ததே நீதி! என்பது போல் சுற்றி வருகிறது இந்த உலகம். புதிதாக படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதனை, மக்களாகிய நாம் “எப்ப பாக்கணும்! எங்க பாக்கணும்!” என்பது போன்ற முடிவுகளை கார்ப்பரேட் தீர்மானித்து விடுகின்றனர். ஒரே ஒரு சாய்ஸை வைத்து அதை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடம் கொடுத்து விடுகின்றனர் இந்த பலவான்கள்.


மருதநாயகம் படத்திற்காக இப்படியெல்லாம் போராடினாரா கமல்!
[Sunday 2024-03-17 18:00]

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


கமலுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!
[Sunday 2024-03-17 07:00]

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளருடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவர் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார். இதனால் நடிகர் கமலுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்துகொண்டுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ்.


காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சிவகார்த்திகேயன்!
[Sunday 2024-03-17 07:00]

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23வது படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிய சிவா.


நடிகர் மணிவண்ணனின் மகனும் நடிகரா?
[Saturday 2024-03-16 18:00]

நடிகர் மணிவண்ணன் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.


"விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்!
[Saturday 2024-03-16 18:00]

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.


சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த சிக்கல்!
[Saturday 2024-03-16 18:00]

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் பண்ணும் படம் தான் அமரன். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படுகிறது.


கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்!
[Saturday 2024-03-16 07:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இன்று (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.


"தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்" - படுக்கையறை காட்சி குறித்தும் பேசிய பிக் பாஸ் பூர்ணிமா!
[Saturday 2024-03-16 07:00]

Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


22 வருடமாக கெத்து காட்டிய அஜித்தின் பிடிவாதத்தை உடைத்த 5 விஷயங்கள்!
[Friday 2024-03-15 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்கள், தனக்கென ஒரு கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு வட்டத்திற்குள்ளேயே பயணித்து வருகிறார். ஆனால் தனது படங்களில் “என் வாழ்க்கை வட்டமோ! சதுரமோ அல்ல! நேர்கோடு! யார் வந்தாலும் கவலைப்படாமல் போய்க்கொண்டே இருப்பேன்” என்று தத்துவமழை பொழிவார் .


இதயக்கனியின் 10 வருஷ உழைப்பை வெறும் 3 நாட்களில் தகர்த்த தளபதி!
[Friday 2024-03-15 18:00]

எந்த ஒரு தமிழ் நடிகர்களும் சிவாஜி கணேசன் மாதிரி நல்ல நடிகராக வரவேண்டும் என்று துளி கூட ஆசைப்படுவதாக தெரியவில்லை. எம்ஜிஆர் போன்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் பயணித்து வருகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலம் வேற, விஜய் காலம் வேறு.


திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்!
[Friday 2024-03-15 18:00]

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. அவர் தற்போதும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.


ரஜினி, கமல் என முக்கிய நடிகர் படங்களை நிராகரித்த நடிகை: யார் தெரியுமா?
[Friday 2024-03-15 08:00]

ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகின்றனர். அவர்கள் நடிக்கும் படத்தில் ஒரு சின்ன ரோல் கிடைத்தாலும் போதும் என இருப்பவர்கள் பலர். ஆனால் அந்த ஆசையே பலரும் நடப்பதில்லை.


தியேட்டருக்கு முன்பே டிவியில் வரும் படம்: கொந்தளித்த பிரபல நடிகர்!
[Friday 2024-03-15 08:00]

பொதுவாக அனைத்து படங்களும் தியேட்டரில் முதலில் ரிலீஸ் ஆகி, அதன் பின் ஓடிடியில் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் டிவியில் ஒளிபரப்பாகும். கொரோனா காலத்தில் தான் நேரடி ஓடிடி ரிலீஸ், நேரடி டிவி ரிலீஸ் என சில படங்கள் மட்டும் வெளியாகின. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டபோதிலும் 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிவியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் படம் வர இருக்கிறது.


கமல் தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்!
[Thursday 2024-03-14 18:00]

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.


100 கோடியை தாண்டி ஹிட் அடித்த 5 மலையாள படங்கள்!
[Thursday 2024-03-14 18:00]

சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை செய்து வந்த நிலையில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படங்கள் அசால்ட்டாக 100 கோடியை தாண்டி கெத்து காட்டி வருகிறது. அவ்வாறு உலக அளவில் 100 கோடியை தாண்டி சாதனை படைத்த 5 மலையாள திரைப்படங்களை காணலாம்.


ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் மாயா!
[Thursday 2024-03-14 18:00]

இன்று சின்னத்திரையில் அதிகளவு ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவாக திகழக்கூடிய பிக் பாஸ் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை 7 ஆண்டுகள் நடந்து ஏழு சீசன்களாக நடந்துள்ளது என்று கூறப்படும் வேளையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலகநாயகன் கமலஹாசன்.


கமலால் காணாமல் போன இரண்டு பெரும் முதலாளிகள்!
[Thursday 2024-03-14 06:00]

கமலைப் பொறுத்தவரை சினிமா பணம் சம்பாதிக்கிற ஒரு மிஷினாகவும் அல்லது பொழுது போக்காகவும் மட்டும் பார்வையிடக் கூடியவர் அல்ல. ஒவ்வொரு புதுமையான விஷயங்களை செலுத்தியவர். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத இலக்கணத்தை உடைத்தவர் தான் உலக நாயகன். அந்த வகையில் இந்திய சினிமாவில் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கலைஞன்.


அடுத்த படத்தை தொடங்கிய அட்லீ!
[Thursday 2024-03-14 06:00]

இயக்குனர் அட்லீ கடந்த வருடம் ஜவான் படத்தின் மூலமாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படத்திற்காக அவர் பல வருடம் காத்திருந்து அதன் பின் தான் முழு படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.


ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்!
[Wednesday 2024-03-13 18:00]

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


சர்க்காரை மிஞ்சும் "தளபதி 69"!
[Wednesday 2024-03-13 18:00]

“நான் ஆணையிட்டால்! அது நடந்து விட்டால்! இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்!” என்ற ஒரு பாட்டை மட்டுமே வைத்து மூன்று முறை தமிழகத்தை ஆட்சி செய்தார் புரட்சித் தலைவர். இப்போது அவரது பாணியை பின்பற்றி கடைசியாக அரசியலை மையமாக வைத்து உருவாகும் கதையில் நடிக்கப் போவதாக முடிவு எடுத்துள்ளார் தளபதி.


எஸ்.ஜே. சூர்யா பட நடிகைக்கு 40 வயதில் திருமணம் முடிந்தது!
[Wednesday 2024-03-13 18:00]

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா சோப்ரா. இவருக்கு திருமணம் என கடந்த மாதம் தகவல் வெளிவந்த நிலையில், அதே நடிகை மீரா சோப்ரா உறுதி செய்தார். இந்த நிலையில் தற்போது மீரா சோப்ராவின் திருமணம் பிராம்மண்ட முறையில் ராஜஸ்தானில் நடந்துள்ளது.


சிவகார்திகேயனால் தூக்கம் இல்லாமல் தவிக்கும் கமல்!
[Tuesday 2024-03-12 18:00]

பொதுவாக கமலின் நடிப்பை குறை சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை தத்துரூபமாக கொடுக்கக் கூடியவர். அப்படிப்பட்டவரை லோகேஷ் சரியான நேரத்தில் பயன்படுத்தி விக்ரம் படத்தை கொடுத்தார். இப்படம் வெற்றி அடைந்ததன் மூலம் கமலுக்கு நல்ல நேரம் கூடிவிட்டது. தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் நடிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை தயாரிப்பில் போட்டு அதிலும் லாபத்தை பார்க்க துணிந்து விட்டார்.


கடும் மன உளைச்சலில் கௌதம் மேனன்!
[Tuesday 2024-03-12 18:00]

கௌதம் மேனன் ஒரு காலத்தில் இளைஞர்களின் இஷ்டமான இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்திருந்தார். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி காதல் மற்றும் ஆக்சன் படங்களை வித்தியாசமான முறையில் கொடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால் எடுத்த பெயர் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பெயிலியர் இயக்குனர் என்ற பெயரை எடுத்து விட்டார்.


துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் தனுஷ் பட நடிகை!
[Tuesday 2024-03-12 18:00]

துருவ் விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் அவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டான துருவ் விக்ரம், அப்படத்திற்காக கபடி பயிற்சியை மேற்கொண்டு வந்தார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.


நடிகர் சங்க கட்டிடத்துக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த விஜய்!
[Tuesday 2024-03-12 06:00]

நடிகர் சங்கம் சார்பில் தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பல நடிகர்களும் அதற்காக நிதி உதவி அளித்து இருக்கின்றனர். சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு கோடி ருபாய் கட்டிடத்திற்காக கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய்யும் நிதி வழங்கி இருக்கிறார்.


ஜோதிகாவின் 'ரீஎன்ட்ரி' படத்திற்கு கிடைத்த வரவேற்பு!
[Tuesday 2024-03-12 06:00]

பல வருடங்களுக்கு பிறகு நடிகை ஜோதிகா ஹிந்தி சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் படம் சைத்தான். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோரும் நடித்து இருக்கும் இந்த படம் கடந்த மார்ச் 8ம் தேதி திரைக்கு வந்தது.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா