Untitled Document
April 28, 2024 [GMT]
மாந்தை கிழக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தை! Top News
[Tuesday 2023-04-11 06:00]

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி விற்பனை சந்தை நேற்று இடம்பெற்றிருந்தது.


இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழா! Top News
[Tuesday 2023-04-11 06:00]

இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் நூல்நிலைய கலாசார மண்டபத்தில், தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்! Top News
[Sunday 2023-04-09 20:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர். முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.


மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி! Top News
[Sunday 2023-04-09 20:00]

அராலி சிறீ முருகன் சனசமூக நிலையத்தின் 83வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன. மரதன் ஓட்டப் போட்டிகளானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.


உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி! Top News
[Sunday 2023-04-09 20:00]

இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவதேவாலயங்களில் கூட்டுத்திருப்பலிஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.


சர்வதேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! Top News
[Thursday 2023-04-06 06:00]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.


ஆன்மீக அறக்கட்டளை உதவித் திட்டம் வழங்கல்! Top News
[Thursday 2023-04-06 06:00]

நேற்றைய தினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது! Top News
[Wednesday 2023-04-05 06:00]

நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய எல்லைக்குள் உள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.


கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு! Top News
[Tuesday 2023-04-04 06:00]

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.


கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்துகொண்ட, போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி! Top News
[Tuesday 2023-04-04 06:00]

"விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்" என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது.


யாழ் உயர்கல்விக் கண்காட்சி ஆரம்பமாகியது! Top News
[Saturday 2023-04-01 18:00]

வடமாகாணகல்வி அமைச்சு, யாழ். இந்தியா உதவித்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில், கல்விபொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம் ஆகிய கல்வித்தரத்தில் இருந்து இடைவிலகிய வடமாகாண மாணவர்களின் தொழில்தகமைக்கான சான்றிதழ்களை பெறும்வகையில் சிறந்த உயர்கல்வி கற்கைநெறியினை கற்பதற்காக, இரண்டாவது தடவையாக எற்பாடு செய்யப்பட்ட யாழ். உயர்கல்விக் கண்காட்சி இன்று யாழ். தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.


சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303 ஆவது மலர் வெளியீடு! Top News
[Saturday 2023-04-01 18:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303வது இதழ் வெளியீடு நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி! Top News
[Saturday 2023-04-01 06:00]

மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 30.03.2023 ( வியாழக்கிழமை ) அன்று மாணவர்களினால் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.


பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Saturday 2023-04-01 06:00]

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மை வல்லுனர் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.


கிளிநொச்சி பாடசாலையில் வன்முறைச் சம்பவம் - வெடித்தது போராட்டம்! Top News
[Saturday 2023-04-01 06:00]

கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நுழைந்து தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் நேற்று காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.


சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்! Top News
[Thursday 2023-03-30 19:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா 92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்! Top News
[Thursday 2023-03-30 19:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர்.


கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்! Top News
[Thursday 2023-03-30 19:00]

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது. பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு வண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.


யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023! Top News
[Tuesday 2023-03-28 21:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டுவருடங்கள் இப்போட்டி நடைபெறாதிருந்தது. இம்முறை 25.3.2023 சனிக்கிழமை பத்து ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் யேர்மனியில் தோகைவிரித்தாடியது.


நாவலர் வரலாற்று கண்காட்சியும் விற்பனையும்! Top News
[Tuesday 2023-03-28 21:00]

நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சியம் விற்பனையும் யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு நாளை புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.


காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப குளிர்மையினை எற்படுத்தும் பழவகை வியாபாரம் சூடுபிடிப்பு! Top News
[Tuesday 2023-03-28 21:00]

காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப சந்தைப்பகுதிக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தின் வியாபாரம் இன்று மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக யாழ். பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.


யாழ். தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா! Top News
[Tuesday 2023-03-28 06:00]

யாழ். தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா நிகழ்வானது நேற்று (27) காலை 9 மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசாவும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனும் கலந்து சிறப்பித்தனர்.


நீர்வளங்கள் சார் களப்பயணம்! Top News
[Tuesday 2023-03-28 06:00]

பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடனான நீர் சார்ந்த உரையாடல் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது. களப்பயணத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்றிட்டம் ஊடாக உருவாகிய வடக்கின் நீர் உரையாடல் மன்றம் மற்றும் Young Water Professional North இணைந்து ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆதிலிங்கேஷ்வரர் ஆலய விவகாரம் - யாழில் வெடித்தது போராட்டம்! Top News
[Tuesday 2023-03-28 06:00]

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை உருத்திரசேனை மற்றும் சிவசேனை அமைப்பினரால் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அண்மையில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


அகில இலங்கை ரீதியில் யாழ். ஊடக கற்கைகள் துறை முதலிடம்! Top News
[Tuesday 2023-03-28 06:00]

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை படைத்துள்ளது.


வெடுக்குநாறி மலையில் மாதவெறியர்களின் அட்டகாசம் பிடிங்கி வீசப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஏனைய சிலைகளும் தகர்ப்பு - நீதிமன்ற உத்தரவை மீறி அட்டகாசம்! Top News
[Tuesday 2023-03-28 06:00]

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.


நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வியாபாரத்தில் வீழ்ச்சி - வர்த்தகர்கள் கவலை! Top News
[Sunday 2023-03-26 17:00]

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது விற்பனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்பொருள் வாணிப உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்! Top News
[Saturday 2023-03-25 19:00]

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா