ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல, துணை ஜனாதிபதியாகக் கூட தெரிவு செய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை அல்ல என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் 02ஆம் ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால் வீதியின் நடுவே புரண்டது. விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஜனாதிபதியை கௌரவிக்கும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவு படுத்தியுள்ளது.
கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.