Untitled Document
May 14, 2024 [GMT]
கைதான புலனாய்வு அதிகாரிகளுக்கு இராணுவம் உதவவில்லையாம்! - உறவினர்கள் விசனம்
[Monday 2016-01-11 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் கைதான இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு இராணுவத்தின் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினரும் உதவிகளை வழங்காத காரணத்தினால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


புதிய நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வருகிறது வித்தியா கொலை வழக்கு!
[Monday 2016-01-11 07:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுதுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.


மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சிவராஜா ஜெனிபன்
[Monday 2016-01-11 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருவதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தக் காலப்பகுதியில், அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபனுக்கு, ஜனாதிபதி தான் பதவியேற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.


புலிகளை விடுவித்து இராணுவத்தை தண்டிப்பதே அரசின் நோக்கம்! - என்கிறார் மகிந்த
[Monday 2016-01-11 07:00]

விடுதலை புலிகளை விடுதலை செய்வதும் எமது இராணுவத்தை தண்டிப்பதுமே இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேவை. அதற்கு ஜனாதிபதியும் சிறந்த எடுத்துக்காட்டு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் உறுப்பினர் சிவராஜா திலீபனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மரணதண்டனையை ரத்துச் செய்ய முடியாது - அடம்பிடிக்கிறார் நீதியமைச்சர்!
[Monday 2016-01-11 07:00]

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை மீறப்பட்டுள்ளது! - அனுரகுமார திசநாயக்க
[Monday 2016-01-11 07:00]

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியின் தலைவர் இதனைக் கூறினார்.


தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 42ஆவது நினைவு நாள் - யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Sunday 2016-01-10 19:00]

தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.


காணாமற்போன உறவுகளுக்கு மரணச்சான்றிதழ் பெற 48 பேர் மட்டுமே விண்ணப்பம்!
[Sunday 2016-01-10 19:00]

காணாமல்போன தமது உறவுகளுக்காக கடந்த ஆண்டில் 48 பேர் மாத்திரமே இறப்புப் பத்திரத்தை கோரி பதிவு செய்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


யோசித்த ராஜபக்ச விரைவில் கைது!
[Sunday 2016-01-10 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் யோசித்த கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


மூத்த பத்திரிகை ஆசிரியர் இரத்தினசிங்கம் காலமானார்! Top News
[Sunday 2016-01-10 19:00]

சுடர் ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார்.


இந்தியா எதிர்ப்பு - போர் விமானக்கொள்வனவை இடைநிறுத்தியது இலங்கை!
[Sunday 2016-01-10 18:00]

இந்தியா கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக, விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களிற்கு முன்னர் ஏன் இலங்கை குறிப்பிட்ட வகை விமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு புதுடில்லி இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது.


புதிய ஆயரின் காலத்தில் மாற்றங்கள் நிகழும்! - விக்னேஸ்வரன்
[Sunday 2016-01-10 18:00]

யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் காலத்தில் பல மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும், மக்களை ஒருங்கிணைத்து அவர் பாரிய சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவாரென நம்புவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


இந்த ஆண்டு 500 இந்திய மீனவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார் அமைச்சர்! Top News
[Sunday 2016-01-10 18:00]

அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளை கைப்பற்றி சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு கடலோரக் காவற்படை, மற்றும் நீரியல் வளத்துறையினருக்கு மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று அறிவுறுத்தல் வழங்கினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கிணற்றுக்குள் தவறி விழுந்த மின்சாரசபை ஊழியர் மரணம்!
[Sunday 2016-01-10 18:00]

கிணற்றில் நீர் அள்ளி குளித்தவர், கால் இடறி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மின்சார சபையில் ஊழியராக பணி புரியும் சோமசுந்தரம் தவராஜா (வயது 52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.


சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்றும் இரகசிய சதியில் மஹிந்த!
[Sunday 2016-01-10 18:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றும் இரகசிய முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்து கட்சியின் தலைமைப் பதவியை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தீவிரம் காட்டி வருவதாகவும், இதன் காரணமாகவே அவர் கட்சியை விட்டு வெளியேறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மைத்திரியால் மன்னிக்கப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பினார்! Top News
[Sunday 2016-01-10 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர், தன்னுடைய சொந்த ஊரான யாழ்ப்பாணம் கோப்பாய்க்கு, நேற்று திரும்பினார். தன்னை படுகொலைச் செய்வதற்கு முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெள்ளிக்கிழமை மன்னிப்பளித்தார்.


24 மணிநேரத்தில் மைத்திரியிடம் குவித்த 3200 முறைப்பாடுகள்!
[Sunday 2016-01-10 18:00]

பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில்


கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில்! - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயத் திட்டம்
[Sunday 2016-01-10 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் எதிர்வரும், 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மகிந்தவிடம் திருமணச்செலவு, மரணவீட்டுச் செலவுக் கணக்குகளைக் கேட்கிறது ஆணைக்குழு!
[Sunday 2016-01-10 08:00]

தனது ஆட்சிக் காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 100 பக்க கடிதமொன்றை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு பதவியிலிருந்து வெளியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளின் விபரங்களை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்முறையாக இலங்கைக்கு அழைப்பு!
[Sunday 2016-01-10 08:00]

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு முதல் தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் டாவோஸில் எதிர்வரும் 20ம் திகதி உலகப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் 52 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரகீத் கடத்தல்- ஏழு ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!
[Sunday 2016-01-10 08:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு ஊடகவியலாளர்களிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எக்னெலிகொடவுடன் பணிபுரிந்த ஊடகவியலாளர்களிடமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


இலங்கைக்கு நிதியுதவிகளைத் திறந்து விடுகிறது அமெரிக்கா
[Sunday 2016-01-10 08:00]

இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னரே இலங்கைக்கு, அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.


அடுத்தமாத நடுப்பகுதிக்குள் இலங்கை வருகிறார் சுஸ்மா! - யாழ்ப்பாணமும் செல்வார்.
[Sunday 2016-01-10 08:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி இந்திய


அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? - சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி
[Sunday 2016-01-10 08:00]

ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை இலங்கை அரசாங்கம் புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


மைத்திரி, ரணில் யாழ். வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்! - சிவாஜிலிங்கம் அறிவிப்பு
[Sunday 2016-01-10 08:00]

தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. ஆனால் இந்த ஆட்சி காலமும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை.


சிங்க லேயை தடுக்காவிடின் புலி இரத்தமும் உருவாகும்! - ஊடக அமைப்பு எச்சரிக்கை
[Sunday 2016-01-10 08:00]

நாட்டில் தற்போது இனநல்லிணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நாளை மறுநாள் கொழும்பு வருகிறார்!
[Sunday 2016-01-10 08:00]

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி மாலைதீவிலிருந்து கொழும்பு வரும் அவர், அரச உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.


செல்வாவுடனான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார்! - ஜனாதிபதி மைத்திரி Top News
[Saturday 2016-01-09 19:00]

டட்லி - செல்வா மற்றும் பண்டா - செல்வாம் ஒப்பந்தங்கள் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகி இருக்கமாட்டார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்ற விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா