Untitled Document
May 19, 2024 [GMT]
அரசியல் கைதிகள் விவகாரம் சரியாக கையாளப்படவில்லை! - சட்டத்தரணி கே.வி. தவராசா
[Sunday 2016-01-17 19:00]

அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன.


நாட்டை பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! - ரணில்
[Sunday 2016-01-17 19:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்றும் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை நிகழ்த்தியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


நாடு பிளவுபடப் போவதாக மக்களைத் தூண்ட சிலர் முயற்சி! - நிமால் சிறிபால டி சில்வா
[Sunday 2016-01-17 19:00]

நாட்டை பிளவுபடுத்த போகிறார்கள் என்று கூறி சிலர் மக்களை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர்களை விட சுதந்திரக் கட்சியினர் தேசப்பற்றாளர்கள் எனவும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஜேர்மனிக்குச் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி!
[Sunday 2016-01-17 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போதான சந்திப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு வேலைகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன.


முதலமைச்சர் - ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு நடக்கவில்லை!
[Sunday 2016-01-17 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வட மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பாக வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் கடந்த 11ஆம் திகதி பொதுக் குழுக்கூட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்தக் கேள்விகளுக்கு இன்றும் பதிலளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.


இலங்கையை அபிவிருத்தி செய்வதில் வெளிநாடுகள் மத்தியில் போட்டி! - என்கிறார் ஜனாதிபதி
[Sunday 2016-01-17 19:00]

தற்போதைய நிலமையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கு சர்வதேச நாடுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


ஜெய்சங்கரின் பயணத்தை அடுத்து பாகிஸ்தான் போர் விமானக் கொள்வனவை நிறுத்தியது இலங்கை!
[Sunday 2016-01-17 19:00]

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தை அடுத்தே பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎப் 17 ரக விமானங்கiளை கொள்வனவு செய்வதில்லை என்று இலங்கை, முடிவெடுத்ததாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை, 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் 10 ஜேஎப் விமானங்களை கொள்வனவு செய்யவிருந்தது.


மன்னார் மாவட்ட புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேசாலையில் முதற் திருப்பலி! Top News
[Sunday 2016-01-17 19:00]

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலிக்க பரிபாலகரான, ஓய்வுபெற்ற ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை இன்று மன்னார் - பேசாலை கிராமத்திலுள்ள புனித வெற்றி நாயகி ஆலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவுற்றதும், பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிப் பேரவை அங்கத்தவர்களை சந்தித்தார். சந்திப்பில் ஆன்மீகம், சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


யாழ். நகரில் இளைஞர் மீது வாள் வெட்டு! - படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி
[Sunday 2016-01-17 19:00]

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் நேற்றிரவு, இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் இளைஞனொருவர், படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் தர்மிகன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


பாடசாலையில் தங்கியுள்ள 13 முஸ்லிம் குடும்பங்களை வெளியேற உத்தரவு! - மாற்று இடம் தருமாறு போராட்டம் Top News
[Sunday 2016-01-17 18:00]

யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.


உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கிறார் முதலமைச்சர்!
[Sunday 2016-01-17 09:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இன்று பதிலளிக்கவுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 9.30 க்கு வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறுகிறது.


அரசியலமைப்பு வரைவுக்கு சுவிஸ் தென்னாபிரிக்க நிபுணர்கள் உதவி!
[Sunday 2016-01-17 09:00]

உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் குழு பங்குகொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. சுவிட்ஸர்லாந்து ப்ரீபேர்க் பல்கலைக்கழக சமஷ்டி கற்கைபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஈவா மாரியா மற்றும் தென்னாபிரிக்க வெஸ்டன் கேப் பல்கலைக்கழக பேராசிரியர் தெஷோ ஸ்வேட் லர், ப்ரிபுக் பல்கலைக்கழக பேராசிரி யர் மாகெட்டி ஆகிய அரசியலமைப்பு துறைசார் வல்லுநர்கள் குறித்த குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.


ஊடகக் கண்காட்சிகளை நடாத்தாது குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்! - ஜே.வி.பி கோரிக்கை
[Sunday 2016-01-17 09:00]

ஊடகக் கண்காட்சிகளை நடாத்தாது குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஊடக கண்காட்சிகளை நடாத்தாது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் எதிர்வரும் வாரங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.


புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை! - பௌத்த அமைப்புகள் கோரிக்கை
[Sunday 2016-01-17 09:00]

ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மதத்தை பாதுகாக்க விரிவான திட்டங்கள் முன்னெடுக்க பௌத்த அமைப்புக்களும் தேசப்பற்றுடைய தேசிய அமைப்புக்களும் கூட்டாக இணைந்து முயற்சியை மேற்கொள்ளவுள்ளன. நாடு முழுவதிலும் கருத்தரங்குகள், செயற் திட்டங்கள், துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இராணுவத்தை நவீன மயப்படுத்த பிரித்தானியா உதவி!
[Sunday 2016-01-17 09:00]

21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான வகையில் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தும் பயிற்சிகளை வழங்கத் தயார் என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினரை ஈடுபடச் செய்ய ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.


புதிய கட்சி அமைக்க முனைவோரை களையெடுக்க சுதந்திரக் கட்சி திட்டம்!
[Sunday 2016-01-17 09:00]

புதிய அரசியல் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ பங்களிப்பும் வழங்கும் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் பேச்சு நடத்தி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


காலநீடிப்புக் கோருகிறது பரணகம ஆணைக்குழு!
[Sunday 2016-01-17 09:00]

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


சிராந்தி ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறது வெளிவிவகார அமைச்சு!
[Sunday 2016-01-17 09:00]

சிராந்தி ராஜபக்ஸவிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சு வழக்குத் தொடர உள்ளது. சீனா வழங்கிய நிதியை சிராந்தி அரச வங்கியில் வைப்புச் செய்யாது, தனியார் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சீனா வழங்கிய நிதி இவ்வாறு தனியார் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. சிராந்தியின் நடவடிக்கை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பிலான ஆவணங்களை வெளிவிவகார அமைச்சு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஐந்து இலட்சம் பேருக்கு எயிட்ஸ் பரிசோதனை!
[Sunday 2016-01-17 09:00]

2015ம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் பேர் எயிட்ஸ் பரிசோதனை செய்துள்ளதாக, தேசிய எயிட்ஸ் நோய்த் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியுள்ளதா என்பது தொடர்பில் நடத்தும் இரத்த பரிசோதனையை தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் ஐந்து லட்சம் பேர் கடந்த ஆண்டு செய்து கொண்டுள்ளனர். அரசாங்க வைத்தியசாலையில் மூன்று லட்சம் பேரும், தனியார் வைத்தியசாலைகளில் இரண்டு லட்சம் பேரும் இவ்வாறு இரத்தப் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.


விசேட அறிவிப்பை இன்று காலை வெளியிடுகிறார் ரணில்!
[Sunday 2016-01-17 09:00]

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். இன்று முற்பகல் 10 மணி அளவில் அலரி மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பரந்துபட்ட சர்வதேச அர்ப்பணிப்பு இல்லாததால் தான் சமாதான முயற்சிகள் தோல்வி! - எரிக் சொல்ஹெய்ம்
[Saturday 2016-01-16 20:00]

பரந்துபட்ட சர்வதேச அர்ப்பணிப்பு காணப்பட்டிருந்தால் இலங்கையில் சமாதான முயற்சிகள் வெற்றியடைந்திருக்கும் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானபிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அட்லான்டிக் கவுன்சிலின் தென்னாசிய நிலையத்தின் கலந்துரையாடல் ஓன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை! - சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல்
[Saturday 2016-01-16 20:00]

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இலங்கையின் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 40 பேர் மற்றும் 11 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பன இணைந்து இது தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


96 வயதை எட்டிய இரணமடுக்குளத்துக்கு 96 பானைகளில் பொங்கல்! Top News
[Saturday 2016-01-16 20:00]

கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 96 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 96 பானைகளில் இன்று காலை கமக்கார அமைப்பினால் கனகாம்பிகை அம்மன் கோவிலில் 96 பானைகளில் பொங்கல் பொங்கி வழிபாடு நடத்தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரணைமடு குளம் 1920 ஆம் ஆண்டு விவசாயத் தேவைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. இதன் 96 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டே இரணைமடு குளத்தின் கீழான 22 திட்டக்குழுக்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 96 பானைகளில் பொங்கல் பொங்கின.


தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என்கிறார் கஜேந்திரகுமார்!
[Saturday 2016-01-16 20:00]

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழுவின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதன் அறிக்கை முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணத்தில் சிறார் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!
[Saturday 2016-01-16 19:00]

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.


சிங்கப்பூரில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த மாகாணசபை உறுப்பினர் பொலிசாரால் கைது!
[Saturday 2016-01-16 19:00]

சிங்கப்பூரில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


அரசியலமைப்பு திருத்தத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கவில்லை! - ஹியூகோ ஸ்வயர்
[Saturday 2016-01-16 19:00]

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு பிரித்தானியா எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்று பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய அரசியலமைப்புக்கு பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் இருக்கின்றதா என்ற கேள்விப் பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.


கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி!
[Saturday 2016-01-16 19:00]

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இது தெற்காசியாவின் நிதி மையமாக கொழும்பு தொழிற்படும். இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஸ், பாகிஸ்தான், சிங்கப்பூர், மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளை இணைக்கக் கூடிய வகையில் இந்த மையம் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா