Untitled Document
May 20, 2024 [GMT]
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே இறந்த நிலையில் 150 க்கும் மேற்பட்ட ஆமைகள்!
[Wednesday 2016-01-20 21:00]

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே 150-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் மற்றும் பாட்டில்நோஸ் டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. பந்தா நிவாஸ் அருகே கடற்கரையில் கிடந்த அந்த சடலங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.கடல்பகுதியில் மீன்பிடி படகுகளால் தாக்கப்பட்டு ஆமைகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஆமைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பூரி-பாலுகாந்த் வனத்துறை அதிகாரி சரத் சந்திரா பெஹரா கூறி உள்ளார். ஏராளமான ஆமைகள் முட்டையிடுவதற்காக ககிர்மாதா கடற்கரைக்கு வருகின்றன. எனவே, அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு!
[Wednesday 2016-01-20 12:00]

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிதீஷ்கண்ணா(3) என்ற மகனும், அம்மு என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது.இந்த நிலையில் நேற்று மாலை அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்டுக்கு சிவகுமார் சென்றார். அப்போது அவர்களது வீட்டில் இருந்து குபுகுபுவென தீயும், கருகிய வாடையும் வீசியது. இதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சிவகுமாரிடம் தெரிவித்தனர்.


ஃபேஸ்புக்கின் இலவச இணையத் திட்டம்: - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கடும் கண்டனம்!
[Wednesday 2016-01-20 12:00]

ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஃப்ரீ பேஸிக்ஸ் இன்டர்நெட் திட்டம் குறித்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான "ட்ராய்" கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஃப்ரீ பேஸிக்ஸ் இன்டர்நெட் திட்டம் குறித்து, அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான "ட்ராய்" கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.இந்தத் திட்டத்தை ஆதரிக்குமாறு கருத்துக் கணிப்புகளை மேற்கொள்வது, பெரும்பான்மைக் கருத்தை மிக முரட்டுத்தனமாக திரட்டுவது என ட்ராய் கூறியுள்ளது.இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக்குடன் இணைந்து இந்தியாவில் வழங்குவதை நிறுத்துமாறு முன்னதாக ட்ராய் கூறியிருந்தது.


உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிய பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: - ராமதாஸ்
[Wednesday 2016-01-20 12:00]

உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு மற்றும் தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா கடந்த இரு நாட்களுக்கு தற்கொலை செய்து செய்து கொண்டது நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவமதிப்புகளும், சீண்டல்களும் கண்டிக்கத்தக்கவை.


ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் பலி!
[Wednesday 2016-01-20 12:00]

ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியான புல்வாமா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நேற்று மாலை நைனா படபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையல் 53வது ராஷ்ட்ரிய ரைபிள் படையினரும், காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, காவல்துறைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள்: -இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரணாப், மோடி வாழ்த்து!
[Wednesday 2016-01-20 12:00]

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலேயே தயாரான ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


குறைகளை களைந்திடும் அம்மா அழைப்பு மையத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!
[Tuesday 2016-01-19 22:00]

பொதுமக்களின் குறைகளை விரைவில் களைந்திடும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் அம்மா அழைப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். இதன்படி 1100 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புக் கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத்தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது: - பிரதமர் மோடி
[Tuesday 2016-01-19 18:00]

சிக்கிம் இயற்கை விவசாய விழாவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகிய ரசாயனப் பொருள்களை விற்பனை செய்வதற்கும், அதைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.அதன்படி, நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிக்கிம் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை முற்றிலுமாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சிக்கிமில் சில அமைப்பினர் அங்கு 48 மணிநேர பந்த் அறிவித்துள்ளனர்.எனவே கோக்ராஜ்கர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முயன்ற சீமான் கைது!
[Tuesday 2016-01-19 12:00]

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்றதாகக் கூறி சீமானை காவல்துறையினர் கைது செய்தனர்.சீமானுடன் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.


சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கி 4 பேர் பலி!
[Tuesday 2016-01-19 12:00]

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.அப்போது திடீரென விஷவாயு தாக்கியது. இதில் அங்கிருந்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.


டெல்லி மேல்சபையில் காங்கிரஸ் பலம் குறைகிறது! - 79 எம்.பி.க்கள் இடம் காலியாகிறது
[Tuesday 2016-01-19 12:00]

பாராளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.அந்த வகையில் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் 79 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இவர்களில் 5 பேர் நியமன எம்.பி.க்கள் ஆனார்கள்.மீதமுள்ள 74 எம்.பி.க்களும் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். உத்தரபிரதேசத்தில் இருந்து 11, பஞ்சாபில் இருந்து 7, மராட்டியம், தமிழ்நாட்டில் இருந்து தலா 6, பீகாரில் இருந்து 5, ராஜஸ்தான், ஆந்திராவில் இருந்து தலா 4 எம்.பி.க்கள் மேல்சபைக்கு தேர்வாக உள்ளனர்.


டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு: - சாட்சி விசாரணை ஆரம்பம்
[Tuesday 2016-01-19 06:00]

இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.சென்னை சூளைமேட்டில் 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-இல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கிச் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.இந்த நிலையில், சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல் துறை சார்பில் கோரப்பட்டது.இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வழக்குரைஞர் எம்.பிரபாவதி ஆஜராகி, சாட்சிகள் விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, விடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று முன்பே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.


வீரதீர விருது பெறும் 8 வயது சிறுமி!
[Monday 2016-01-18 18:00]

பல்வேறு இடர்பாடுகளின்போது வீரமாக செயல் புரிந்த சிறார்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வீரதீர விருது வழங்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி 25 சிறார்களுக்கு தேசிய வீரதீர விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். அதில் ஒருவர் 8 வயதேயான ருச்சிதா. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி ருச்சிகா சென்ற பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியது. அப்போது தைரியமாக செயல்பட்ட ருச்சிதா, 2 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதற்காக அவருக்கு கீதா சோப்ரா விருது வழங்கப்படுகிறது. தேசிய வீரதீர விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறார்களில் மிக குறைந்த வயதுடையவர் ருச்சிதா ஆவார்.


சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல்!
[Monday 2016-01-18 16:00]

காந்தியவாதியான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு மூன்றாவதாக மேலும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மராட்டிய மாநிலம், அகமத்நகர் மாவட்டத்திலுள்ள நெவாசா என்ற பகுதியில் வசிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அம்பாதாஸ் லஷ்கரே என்பவர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில், 'குடியரசு தினமான வரும் 26-ம் தேதி உங்களை கொல்வதற்காக ஐம்பது லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


பேருந்து கவிழ்ந்ததில் கர்நாடகாவைச் சேர்ந்த 30 சபரிமலை பக்தர்கள் காயம்!
[Monday 2016-01-18 16:00]

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ககன்சேரி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 சபரிமலை பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னெர்கட்டாவைச் சேர்ந்த 50 பேர் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்திருந்தனர். சுவாமி தரிசனம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று காலை 9 மணியளவில் அவர்கள் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.இதில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உடல் முழுவதும் ரூ. 3 கோடி தங்க நகைகளை அணிந்துள்ள "தங்க பாபா"!
[Monday 2016-01-18 16:00]

உத்தரகாண்ட்டில் நடைபெறும் கும்பமேளாவில், உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து வரும் ஒரு சாமியார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எல்லாரும் அவரை "தங்க பாபா" என்று அழைக்கிறார்கள். சன் டிவியில் முன்பு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தங்க வேட்டை. முடிந்த அளவு தங்க நகைகளை அள்ளி அணிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகை ரம்யாகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சிக்குப் பின் அதிக நகை அணிந்தவர்களைக் கண்டாலே தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணன் மாதிரி இருக்கியே என மற்றவர்கள் கேலி கிண்டல் செய்வார்கள். ஆண் சாமியார்...1/9 ஆண் சாமியார்... தற்போதும் தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனைப் போன்றே தங்கநகை அணிந்து ஒருவர் உத்தரகாண்டில் வலம் வருகிறார். ஆனால், அவர் பெண் அல்ல, ஆண். அதிலும் முற்றும் துறந்த சாமியார்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மை வீசிய பாவ்னா அரோராவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!
[Monday 2016-01-18 09:00]

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது மை வீசிய இளம்பெண் பாவ்னா அரோராவை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தில்லி சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒன்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண்களின் அடிப்படையில் கார்களை இயக்கும் முறையை அந்த மாநில அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தில்லி அரசு சார்பில் சத்ரசால் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.


2015-ல் இந்தியாவின் முகநூல் வருவாய் 123.5 கோடி!
[Monday 2016-01-18 07:00]

இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது.


பா.ஜனதாவின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை: -லாலுபிரசாத்
[Monday 2016-01-18 07:00]

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலுபிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-56 அங்குல மார்பு என்னிடம் இருக்கிறது என்று முன்பு நீங்கள் (மோடி) பெருமிதத்துடன் கூறினீர்கள். எல்லைக்கு அப்பால் இருந்து யாராவது நம்மிடம் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என வீரமாகவும் பேசினீர்கள். இன்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் நுழைந்து பதன்கோட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். நமது தீரமிக்க ராணுவ வீரர்களை கொல்கிறார்கள்.பா.ஜனதாவின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. எனவே, பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்.நானும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அஸ்தினாபுரத்தில்(டெல்லி) இருந்து பா.ஜனதாவை வெளியேற்றுவோம்.


பாலஸ்தீனத்துக்கு அளித்து வரும் ஆதரவை இந்தியா எப்போதும் தொடரும்: - சுஷ்மா ஸ்வராஜ்
[Monday 2016-01-18 07:00]

இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.பாலஸ்தீனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற சுஷ்மா ஸ்வராஜை அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மேஸன் ஷமியே வரவேற்றார். இதையடுத்து, பாலஸ்தீனத் தலைநகர் ரமலாவில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலைக்கு சுஷ்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பிறகு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான முகமது யாசீர் அராஃபத்தின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாலஸ்தீனத்துக்கு சென்றிருந்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா பதவியேற்ற பிறகு, பாலஸ்தீனத்துக்கு அவர் சென்றது இதுவே முதல்முறையாகும்.பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டில் இந்தியா செயல்படுத்தி வருகிறது.


பிச்சை எடுப்பதை தடுப்பதற்கு சமூக நலத் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ள மத்திய அரசு!
[Monday 2016-01-18 07:00]

பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில், வீடு இல்லாதவர்களுக்கு அடைக்கலம், சுகாதாரப் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை அளிப்பதற்கான சமூக நலத் திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நிதி ஆதாரமின்றி வறுமையில் உள்ள மக்களுக்கு உணவு, அடைக்கலம், சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுடன், மறுவாழ்வுக்கான ஆலோசனைகளையும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக, உடல் வலிமையுடன் உள்ள நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து, அவர்களையும் சமூகத்தோடு இணைந்து கெளரவாக வாழ வழி வகுப்பது என அந்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது.


மோடி முன்னிலையில் அவரது கனவு திட்டமான 'ஸ்வஜ் பாரத் அபியான்' குறித்த பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
[Sunday 2016-01-17 22:00]

புது தில்லியில் அமைச்சர் வெங்கைய நாயுடு வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோடி முன்னிலையில் அவரது கனவு திட்டமான 'ஸ்வஜ் பாரத் அபியான்' குறித்த பாடலைப் பாடினார்.தெலுங்கு சமூகத்தினர் கொண்டாடும் சங்கராந்தி மற்றும் தமிழகர்களின் பொங்கல் விழா, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் புது தில்லி இல்லத்தில் இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஷன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


டெல்லியில் பெண்ணை சுட்டுக்கொன்று தற்கொலைக்கு முயன்ற போலீஸ் அதிகாரி!
[Sunday 2016-01-17 22:00]

மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் ரன்கோலா காவல் நிலையம் உள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் விஜேந்தர் சிங். இதே பகுதியைச் சேர்ந்த நிக்கி சவுகான் என்பர் தனது கணவர் உடன் வசித்து வந்தார்.விஜேந்தர் சிங் உத்தம் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு பணியில் சேர வரும்போது பகுதி நேர நிரூபர் என்று கூறி நிக்கி சவுகான் விஜேந்தர் உடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின் இருவரிடையே தொடர்பு நீடித்துக் கொண்டு வந்திருக்கிறது.


பாஜகவும்,பிரதமர் மோடியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே உள்ளனர்: - தருண்விஜய்
[Sunday 2016-01-17 19:00]

ஜல்லிக்கட்டு நிகழ்வு என்பது மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்றார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய்.புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் களமாவூரில் உள்ள அழகு மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:நமது கலாச்சார விழாக்களை வரையறுக்க நீதிமன்றகளில் உள்படுத்தப்படுவது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை. தமிழர் கலாச்சாரத்தில் விழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டிகள் வகுக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு!
[Sunday 2016-01-17 09:00]

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி அவர்களை சிறைபிடிப்பதும், துரத்தி அடிப்பதும் வாடிக்கையாகி விட்டது. தமிழக மீனவர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 114 பேர் அங்குள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 106 பேரை இலங்கை அரசு நேற்று முன்தினம் விடுவித்தது.அவர்களில் அக்கரைபேட்டையை சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


நகராட்சி அதிகாரியை கன்னத்தில் அறைந்த கர்நாடக முதல்
[Sunday 2016-01-17 09:00]

கர்நாடக முதல்


ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேர் கைது!
[Sunday 2016-01-17 09:00]

சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறியவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.நேற்று, மாட்டுப் பொங்கலையொட்டி, தக்கலை அருகேயுள்ள பத்மனாபபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முயன்றனர். அதற்கு அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேரை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிய தமிழக அரசு!
[Sunday 2016-01-17 09:00]

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கோகுல இந்திரா, பழனியப்பன், பா.வளர்மதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 9 தமிழ் அறிஞர்களுக்கு விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். திருவள்ளுவர் விருது-தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தந்தை பெரியார் விருது-வி.ஆர்.வேங்கன், திரு.வி.க. விருது-தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், பாரதியார் விருது-கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் பாரதிதாசன் விருது-வீ.ரேணுகாதேவி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-ரா.கோ.ராஜாராம், பேரறிஞர் அண்ணா விருது- பர்வத ரெஜினா பாப்பா, பெருந்தலைவர் காமராஜர் விருது-வேங்கடசாமி, அம்பேத்கர் விருது-பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கினார். இதைத்தொடர்ந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழை வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா