Untitled Document
May 10, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஷால், ஹரி கூட்டணி வெற்றி பெறுமா?
[Saturday 2024-04-27 06:00]

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி ரத்னம் படத்திற்கு முன்னதாகவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக தாமிரபரணி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இந்த சூழலில் இன்று திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹரி எவ்வாறு டாப் ஹீரோக்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தாரோ அந்த அளவுக்கு இந்த படத்திற்கும் இறங்கி வேலை பார்த்துள்ளார்.

பக்கா ஆக்சன் காம்போவாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. சமீபகாலமாக விஷாலின் படங்கள் பெரிய அளவில் வசூல் பெறாத நிலையில் ரத்னம் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். அதற்கு கை மேல் பலனாக இந்த படம் வசூலை மாறி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் முதல் நாளில் ரத்னம் படம் கிட்டத்தட்ட ஒரு கோடி தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இன்று எல்லா திரையரங்குமே ஹவுஸ் புல்லாக இருக்கிறது. அதோடு படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் வந்ததால் டிக்கெட் புக்கிங் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

மேலும் நாளை ரத்னம் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் வசூல் விவரம் முழுமையாக தெரியவரும். ரத்னம் படம் மூலம் இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என்பது இப்போது தெரிந்து விட்டது.

இதுவரை விஷாலின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் ரத்னம் படம் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். அதோடு ஹரிக்கும் ரத்னம் படம் மீண்டும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா