Untitled Document
May 7, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்?
[Friday 2024-04-26 18:00]

நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர். நிறைய தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக அறிமுகம் செய்து வந்தார். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடியவர். இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்லி 2898 என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

சினிமாவில் இதுவரை நாயகனாக 233 படங்களில் நடித்துள்ள இவர் இடையில் சினிமாவில் நடிக்காமல் அரசியல் என பிஸியாக இருந்தார்.

விக்ரம் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியவரின் படங்கள் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கல்கி 2898 படத்தில் நடிப்பதற்காக ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதில் இல்லை என சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் அவர் மொத்தமாக 15 நிமிடங்கள் மட்டுமே வருகிறாராம். அதற்காக அவர் ரூ. 20 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்.

ஒரு 15 நிமிடத்திற்கு ரூ. 20 கோடியா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



இந்தியன் 2 ரிலீசுக்கு வந்த சிக்கல்!
[Tuesday 2024-05-07 18:00]

கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி சில வருடங்கள் கடந்து விட்டது. அதனாலேயே இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த ரிலீஸ் தள்ளிப் போகும் நிலையில் இருக்கிறதாம். ஏனென்றால் தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.



அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
[Tuesday 2024-05-07 18:00]

ஒரு பக்கம் கோலிவுட் மறுபக்கம் பாலிவுட் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 -ல் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். "இப்படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தேன். ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது" என்று தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தது குறித்து பகிர்ந்திருந்தார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார.



பிரபல இயக்குநருடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விஷால்!
[Tuesday 2024-05-07 06:00]

விஷால் கடைசியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. பட புரொமோஷனில் படக்குழு தீவிரமாக நடைபெற்றது. இயக்குநர் ஹரி கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.



மகள் திருமணத்திற்கு பல கோடி செலவு செய்த ரோபோ ஷங்கர்!
[Tuesday 2024-05-07 06:00]

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.



பயில்வான் மகளின் அந்தரங்கத்தை போட்டு உடைத்த ஷகிலா!
[Monday 2024-05-06 18:00]

பத்திரிக்கையாளராக இருந்தாலும் யூடியூப் தான் பயில்வான் ரங்கநாதனை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை புட்டு புட்டு வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். இதனால் இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அவ்வளவு ஏன் நடுரோட்டில் இவரிடம் மல்லுக்கு நின்ற நடிகைகளும் உண்டு. ஆனாலும் இவர் நான் சினிமாவை சுத்தப்படுத்துகிறேன் என்று தன் வேலையை செய்து வருகிறார்.



ஒரே படத்தால் பெயரை கெடுத்து கொண்ட கௌதம் மேனன்!
[Monday 2024-05-06 18:00]

கௌதம் மேனன் மிகவும் ஸ்டைலிசான இயக்குனர். காதல் படங்களை எடுப்பதில் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை இன்று வரை கடைபிடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை விளக்கும்.



வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்! Top News
[Monday 2024-05-06 18:00]

யாஷிகா ஆனந்த் கவர்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்களா இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் தராள கவர்ச்சியில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ...



திடீரென ட்ரெண்டாகும் மஞ்சும்மல் பாய்ஸ்!
[Sunday 2024-05-05 18:00]

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீநாத் பாசி, ஷாகீர் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கொடைக்கானலில் சுற்றுலாவுக்காக நண்பர்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக குணா குகையில் ஒருவர் மாட்டிக் கொள்ள அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.



தேன்கூட்டில் கை வைத்த இளையராஜா: உக்ரத்தோடு காத்திருக்கும் சன் பிக்சர்ஸ்!
[Sunday 2024-05-05 07:00]

இளையராஜா, வைரமுத்து பிரச்சனை ஒரு பக்கம் கூலி டீசர் சர்ச்சை ஒரு பக்கம் என பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் சன் பிக்சர்ஸ் என்ன செய்யப் போகிறது என்பதை தான் பலரும் கவனித்து வருகின்றனர்.



கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்!
[Sunday 2024-05-05 07:00]

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என எக்கசக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க உள்ளனர்.



விஜய், அஜித்தை தாண்டி அடுத்த தலைமுறைகளை நம்பி இருக்கும் 6 ஹீரோக்கள்!
[Saturday 2024-05-04 17:00]

சினிமாவில் காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவது வழக்கம்தான். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் வரை போட்டி போட்டு கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்து இளம் ஹீரோக்கள் எக்கச்சக்கமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் யார் அடுத்த தலைமுறைகளில் இடம் பிடிக்க போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் இடம் பிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு ஹீரோக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.



விஜய் சேதுபதி தொடங்கிய புதிய ஓடிடி!
[Saturday 2024-05-04 17:00]

இப்போது தியேட்டரை காட்டிலும் ஓடிடி தான் ரசிகர்களின் பிரியமான தளமாக இருந்து வருகிறது. ஏனென்றால் தியேட்டருக்கு செல்வதான நேரம் மற்றும் டிக்கெட் செலவு ஆகியவற்றை ஒப்பிடும்போது ஓடிடி மிகவும் குறைவாக உள்ளது.



சிவகார்த்திகேயனை அழிக்க துடித்த 3 நடிகர்கள்!
[Saturday 2024-05-04 07:00]

தமிழ் சினிமாவில் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரைப்பட பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. முழுக்க முழுக்க தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னேறி வந்தவர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி பின்னர் தன் திறமையின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன்.



அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சோபிதா துளிபாலா! Top News
[Saturday 2024-05-04 07:00]

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தவர் சோபிதா துளிபாலா. அவர் ஹிந்தி, ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு பிகினியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ...



கோலிவுட்டை மீட்டெடுத்த சுந்தர் சி!
[Friday 2024-05-03 18:00]

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ரஜினியின் லால் சலாம், விஷாலின் ரத்னம் என பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆன நிலையில் ஒரு தரமான ஹிட் படம் கூட இந்த ஆண்டில் தமிழ் சினிமா கொடுக்கவில்லை. மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா