Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்! Top News
[Monday 2024-04-15 18:00]

இப்போதெல்லாம் பெரும்பாலான நடிகைகள், சினிமாவில் நடிக்க வருவதே தங்களது நடிப்பு திறமையை காட்டவா அல்லது தங்களது உடல் அழகை காட்டவா என்ற சந்தேகம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுகிறது. ஏனென்றால் நடிப்பை காட்டி ரசிகர்களிடம் பெயர் வாங்கிய நடிகைகள் ஒரு காலகட்டத்தில் இருந்தனர். இப்போது தங்களது உடல் அந்தரங்க பகுதிகளை கவர்ச்சியாக காட்டி, அதன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து சினிமாவில் நீடிக்க ஆசைப்படும் நடிகைகள் தான் அதிகமாக இருக்கின்றனர்.

மாளவிகா மோகனன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிசயமான ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன், தமிழில் முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் தான், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் பூங்கொடி என்ற கேரக்டரில் மாளவிகா மோகனன், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் மும்பையில் பிறந்தவர். இவரது அப்பா கே யூ மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தவர். மும்பையில் மாளவிகா மோகனன் பிறந்திருந்தாலும், இப்போது கேரள மாநிலம் பையனூரில் வசித்து வருகிறார் .

முதல் முதலில் மாளவிகா மோகனன் நடித்த மலையாள படம், பட்டம் போலே. அடுத்து நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் 2015 ஆம் ஆண்டில் நடித்தார். அதன் பிறகு கன்னடத்தில் நா மட்டும் வரலட்சுமி என்ற கன்னட படத்தில் நடித்து அறிமுகமானார்.

அடுத்து மலையாளத்தில் தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்த மாளவிகா மோகனன், இந்தியில் நடித்த முதல் படம் பியான்ட் த ஹவுஸ் என்ற படமாகும்.

இப்படி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் நடித்த அவர் தமிழில், பேட்ட படத்தில் பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினியின் படத்தில் நடித்த இவருக்கு நல்ல அறிமுகமும், வரவேற்பும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

அடுத்தது மாஸ்டர் என்ற விஜய் படத்தில் நடித்திருந்தார். இது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம். அதைத் தொடர்ந்து மாறன் என்ற படத்தில் பிரியங்கா மோகனன் நடித்திருந்தார்.

என்னதான் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், கவர்ச்சியை காட்டினால் தான் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும் என்ற பார்முலாவில் இவரும் கடைசியில் சிக்கிக்கொண்டார்.

இப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் மாளவிகா மோகனன்.

அந்த வகையில் இப்போது, படுக்கை அறையில் டூ பீஸ் உடையில் அவர் இருக்கும் ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அரண்டு போய் கிடக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



மே மாதம் வெளியாகும் 10 படங்கள்!
[Monday 2024-04-29 18:00]

மே மாதம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அதை மனதில் வைத்து நிறைய படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏனென்றால் கண்டிப்பாக இந்த கோடை விடுமுறையில் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.



சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகர் வடிவேலு!
[Monday 2024-04-29 18:00]

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புதிதாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி, பின் அதிலிருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் தான் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.



மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த கவின்!
[Monday 2024-04-29 06:00]

சின்னத்திரையில் இருந்து வந்த கவின் டாடா, லிப்ட் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடித்திருக்கும் படம் தான் ஸ்டார். இளம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி போங்ஹர், லால் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மொத்த சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கவின். அதாவது அஜித்தின் முகவரி மற்றும் விஜயின் துள்ளாத மனம் துள்ளும் போன்ற படங்களின் சாயலில் தான் ஸ்டார் படமும் உருவாகி இருக்கிறது.



அஜித் எடுத்த அதிரடி முடிவு!
[Monday 2024-04-29 06:00]

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அறிவித்ததில் இருந்தே பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆகி வருகிறது. அசர்பைஜான் நாட்டில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியது. அதன் பிறகு ஷூட்டிங் மீண்டும் தொடங்காமல் இருக்கிறது.



வெங்கட் பிரபுவுக்கு தளபதி போட்ட கட்டளை!
[Sunday 2024-04-28 18:00]

விஜய் இப்போது கோட் படத்தில் பிஸியாக இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. விசில் போடு என தொடங்கும் அந்த பாடலில் விஜய் அண்ட் கோ-வின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது.



பொன் முட்டையிடும் 2 படங்களை வாங்கிய உரிமையாளர்!
[Sunday 2024-04-28 18:00]

இப்ப வருகிற படங்களில் பெரிய படங்களை விட சின்ன பட்ஜெட்டில் புது ஹீரோக்கள் நடித்து வரும் படங்கள் தான் பார்க்கும் படியாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வசூலை நோக்கி போகாமல் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் முதல் ஆர்டிஸ்ட்கள் வரை மெனக்கெடு செய்கிறார்கள்.



சிங்கம் 4 எப்போது? - இயக்குனர் ஹரி கூறிய தகவல்!
[Sunday 2024-04-28 18:00]

2010ஆம் ஆண்டு ஹரி - சூர்யா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் சிங்கம். இதற்கு முன் இந்த கூட்டணியில் உருவான ஆறு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கம் படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மனதில் இடம்பிடித்தது. வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள், அனல் பறக்கும் வசனங்கள், அழகிய பாடல்கள் என சிங்கம் 1 படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.



மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கி சம்பளம்!
[Sunday 2024-04-28 08:00]

நடிப்பின் இலக்கம் என கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்கிறார். ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ, அதே போல் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு குணச்சித்திர கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் பதியவைத்தார். ஆனால், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி.



சர்ச்சையில் சிக்கிய 'தாங்கலான்'!
[Sunday 2024-04-28 08:00]

தாங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாள் முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.



சிங்கம் போல் அடுத்தடுத்து 4-5 பாகங்களாக வரவிருக்கும் சூப்பர் ஹிட் படம்!
[Saturday 2024-04-27 18:00]

ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இதே கூட்டணியில் பார்ட் 2, பார்ட் 3 என அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டனர். மேலும் சிங்கம் 4 படத்தையும் எடுக்க உள்ளதாக அறிவித்தனர். இந்த சூழலில் சிங்கம் படத்தை போல நான்கு, ஐந்து பார்ட் எடுக்க இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து ரெடியாக வைத்திருக்கிறாராம்.



தொகுப்பாளினியிடம் கடுப்பான சித்தார்த்!
[Saturday 2024-04-27 18:00]

சித்தார்த் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக பேசக்கூடியவர். அதேபோல் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஒரு கேள்விக்கு ஓப்பன் ஆக பதில் அளித்துள்ளார். அதன்படி சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் என்னை ஒரு சக மனிதனாக நினைத்து பேசும் பெண்களிடம் நான் பேசுவேன்.



அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்!
[Saturday 2024-04-27 18:00]

அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் சிறு அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் 2024 ஆம் ஆண்டு அஜித்துக்கு பொன்னான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விஷால், ஹரி கூட்டணி வெற்றி பெறுமா?
[Saturday 2024-04-27 06:00]

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி ரத்னம் படத்திற்கு முன்னதாகவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக தாமிரபரணி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.



சன் டிவி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி!
[Saturday 2024-04-27 06:00]

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.



கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படம் ரீ-ரிலீஸ்!
[Friday 2024-04-26 18:00]

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா