Untitled Document
May 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் – 2023! Top News
[Friday 2023-12-01 05:00]

மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo) அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் தமிழ் பெண்கள்அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. தமிழினி பத்மநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அந்தவேளையில் கொடியேற்றப்பாடல் இசைக்கப்பட்டது. பாடலின் உணர்வுகள் தமிழீழத்தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் மனதை பதியம் வைத்தது. தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ஆம் ஆண்டின் மாவீரர் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பப்பட்டது.

எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூரநோக்குப் பார்வையின் வெளிப்பாடக அமைந்தது. தலைவர் அவர்களது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப் பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் தடைகளையும், அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகளின் அவசியம் பற்றியும் இவ்வறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டது.

இதனை அடுத்து எமது தேசத்தின் உயிரீகத்தெய்வங்களின் துயிலுமில்லத்தில் அகவணக்கம் செய்யப்பட்டு துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை 24.06.1997ஆம் ஆண்டு அன்று வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லரி, மோட்டார், ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்களின் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரவியம் அமுதினி எனும் இயற்பெயர் கொண்ட லெப்.நித்தியா அவர்களின் தாயார் திருமதி. திரவியம் செவ்வந்திமலர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அந்தவேளையில் மாவீரர் குடும்பங்கள் சுடர் ,மலர் வணக்கத்தை இதயம் வெதும்பும் உணர்வோடு துதித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் மாவீரர் உணர்வுடன் தமது சுடர்,மலர் வணக்கத்தை செலுத்தி உணர்வேற்றிக்கொண்டனர். துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் நேரத்தில், எமது மாவீரமணிகளின் எழுச்சிப்பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு மென்மேலும் உணர்வினை ஊட்டி ஆழ்மனதில் மாவீரர்களின் தியாகங்களை உரமூட்டியது.

யேர்மனிக் கிளையின் மாவீரர் பணிமனை ஒவ்வொரு வருடமும் மாவீரர்களினதும் ,எமது தேசத்தின் விடுதலை பற்றிய அறத்தைத் தாங்கிய இதழாக “கார்திகை தீபம் ” எனும் இதழை வெளியீடு செய்து வருகின்றனர். அவ்விதழை இவ்வருடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு இரா.இராஜன் அவர்கள் வெளியீடு செய்ய, தமிழ்க் கல்விக்கழகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அனைத்துலக செயலகத்தின் வெளியீடான “மாவீரம் பேசும் காற்று” எனும் பாடல் தொகுப்பின் தகவல் சேமிப்பானை (USB) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியீடு செய்ய திரு.சக்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பின் போது வெற்றிபெற்ற தமிழாலய மாணவர்கள் தமது அறுவடையின் வெற்றிக்களிப்பின் உச்சத்தை தொட்டனர்.அத்தோடு தமிழத்திறன் போட்டிகளில் யேர்மன் தழுவிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, அவர்களது பேச்சும், கவிதையும் மாவீரர் அரங்கினை மேலும் எழுச்சி ஊட்டியது.

உணர்வின் வேர்களை ஆளும் பேர்லின் (Berlin) கலைஞர்களின் உணர்வூட்டிய நாடகமும், எமது தேசியத்தின் வரலாற்றுப்பதிவாக யேர்மன் இளையோர் அமைப்பால் ஒளிபரப்பப்பட்ட வரலாற்றுப் பதிவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இடதுசாரிக் கட்சியின் உறுப்பினரும் குர்திஸ்தான் அமைப்பின் Baden-Württenberg இணைப்பாளருமாகிய திரு. டென்னிஸ் ஸ்டோஸ் (Dennis storz) அவர்களும், Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo)அவர்களும் விடுதலை பெறும்வரை சோர்வின்றி போராடவேண்டியத்தின் அவசியத்தினை வலியுறுத்தி யேர்மன் மொழியில் உரையாற்றினார்கள்.

அத்தோடு யேர்மன் பெண்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும், தமிழீழப் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் தொடர்ந்தும் நடத்தப் பட்டுவரும் அநீதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மாவீரர் நாளின் சிறப்பு உரையினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய அரசியல் நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையினை எடுத்தியம்பும் பேச்சாக அவரது சிறப்புரை அமைந்திருந்தது.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளின் நிறைவாக யேர்மன் தமிழர் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களது “உணர்வின் அலைகள்” எனும் நாட்டியத் தொகுப்பு எழுச்சி ஊட்டும் வகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளின் நிறைவாக இளையோர் அமைப்பினர் ஒன்றிணைந்து மக்களோடு உறுதிமொழியினை எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப்பாடலோடு 2023ஆம் ஆண்டின் மாவீரர் வணக்கநிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவேறியது .

  
  
   Bookmark and Share Seithy.com



போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்! Top News
[Sunday 2024-05-05 18:00]

போகம்பர சிறைச்சாலையானது வரலாற்று கட்டிடக்கலையுடன் கூடிய ஹோட்டல் வளாகமாகும்… ஒரு முதலீட்டாளர் ஏற்கனவே முன் வந்துள்ளார்… அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்.. இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வேட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.



எஹலேபொல மாளிகையின் உரிமையை உடனடியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்! Top News
[Sunday 2024-04-28 20:00]

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்! Top News
[Monday 2024-04-22 21:00]

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.



கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள்! Top News
[Thursday 2024-03-28 21:00]

கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள் மார்ச் 24, 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆரம்பமான நிகழ்வு கனேடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதன் மூலம் நமது இரட்டை பாரம்பரியத்தையும் கலாச்சாரங்களின் இணக்கமான கலவையையும் பிரதிபலித்து தொடர்ந்தது.



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா