Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய மண்ணில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாதிரி பொது வாக்கெடுப்பு! Top News
[Monday 2023-08-14 21:00]

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம் என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை செயலாக்கும் முயற்சியில் தமிழர்கள் ஒவ்வொருவரும் செயலாற்றி வரும் இந்த நேரத்தில் பொது வாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கத்தினரால் "Yes to Referendum" மாதிரி பொது வாக்கெடுப்பானது பிரித்தானியாவில் பல இடங்களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக இம் மாதிரி வாக்கெடுப்பானது பிரித்தானியாவில் இன்று 13.08.2023 ஞாயிற்று கிழமை ஈலிங் கனக துர்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த் தேர் திருவிழாவிலே நடாத்தப்பட்டது.

பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினால் இம் மாதிரி வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம் மாதிரி வாக்கெடுப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டதோடு இளையோர்கள் பலர் மிகவும் ஆர்வத்தோடு தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.

13/08/2023 நடைபெற்ற இம் மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் 96.% மக்கள் தாங்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 2% மக்கள் ஒரு நாடு இரண்டு அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

08/05/2023 நடைபெற்ற மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் பதிவான செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் 97.35% மக்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 1.19% மக்கள் ஒற்றையாட்சிக்கு ஆதரவாகவும் 1.19% மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் காலம் வரும்போது எம் இளம் தலைமுறையினர் அதில் தாங்களும் பங்கு கொள்ளவேண்டும் என்ற தூர நோக்குடனே இது போன்ற மாதிரி பொது வாக்கெடுப்புகள் "பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினரால்" உலகம் பூராக்கவும் நடாத்தப்பாட்டு வருகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா