Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முல்லைதீவில் செந்தில் குமரனின் மேலுமொரு நிவாரண திட்டம்!
[Thursday 2023-07-20 18:00]

இதய சிகிச்சை பிரிவினை கனடா உயர் ஸ்தானிகர் திறந்து வைத்தார் செந்தில் குமரனின் நிறுவனத்தின் நிதியால் சென்ற வருட இறுதியில் கனடா மல்லாவி இரத்த சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் டொரோண்டோ முல்லை இரத்த சுத்திகரிப்பு நிலையம் என்ற தொடர்ச்சியில் இன்று மாஞ்சோலை மருத்துவமனைக்கு மேலுமொரு வரப்பிரசாதமாக மார்க்கம் முல்லை இதய நோய் சிகிச்சை பிரிவு கனடாவின் இலங்கைக்கான தூதுவரான திரு எரிக் வால்ஷ் நினைவு கல்லினை திறந்து வைத்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் மூத்த இதயசிகிச்சை நிபுணரான வைத்தியர் லக்ஷ்மன் இழைக்கச்சையினை வெட்டி நிலையத்தினை திறந்து வைத்தார். பல மூத்த வைத்திய நிபுணர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். கடந்த காலங்களில் இந்த சிகிச்சை பிரிவு இல்லாமல் பல உயிர்களை முல்லைதீவு மாவட்டம் இழந்திருக்கிறது.

இலங்கையில் வாழும் வறிய தமிழ் மக்களுக்கு தனது நிவாரண அமைப்பின் ஊடாக கனடாவில் பாடி நிதி சேகரித்து பல நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் பாடகர் செந்தில் குமரன் அவர்களுக்கு கனடா தமிழர்களிடையே பெரும் ஆதரவு இருப்பதனை அவதானிக்க முடிகிறது. மேற்குறிப்பிட்ட திட்டங்களை விட அவர் தமிழீழம் முழுவதிலும் மருத்துவர்களுடான நட்பினை ஏற்படுத்தி மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களுக்கு மீள்வாழ்வு அளித்தவராவார்.

கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை கடந்த பல வருடங்களுக்கு முன் ஸ்தாபித்து படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வைத்தியம் வழங்கும் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி கொண்டிருப்பது, இதனால் பயனுறும் நோயாளிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் பெரும் ஆறுதலனை தருகிறது.

இது மட்டுமல்லாமல் பல கோடிகள் பெறுமதியான வாழ்வாதாரங்கள் இவரின் நிறுவனத்தால் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது. மொத்தத்தில் கடந்த எட்டு மாதத்தில் ரூபாய் 18,382,080 நிதியுதவி முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளது. இவரை போல் பல செந்தில் குமாரன்கள் எங்கள் தமிழ் ஈழத்திற்கு தேவை

- தாயகத்திலிருந்து அகல்யா பரம்

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா