Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை! Top News
[Saturday 2023-04-15 06:00]

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும், கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. கனடியத் தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடையூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினரால் பதினான்காவது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர் நடைப ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் இரண்டாம் கட்டமாக கனடியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாம் தொகுதி மருந்துப் பொருட்கள் ஏப்ரல் 12 புதன்கிழமை அன்று 2:30 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மருந்து பொறுப்பேற்றல் நிகழ்வில் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் இதுரைரத்தினம் துசியந்தன், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் A இக்பால், நோயியல் நிபுணர் மருத்துவர் அகிலன் சின்னத்துரை மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை நிர்வாக பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

எதிர்வரும் மாதங்களில் ஏனைய மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் திட்டமிட்டபடி கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா