Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கதாநாயாகியாகும் நடிகையின் மகள்கள்!
[Tuesday 2018-02-20 17:00]

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கனவே நடிகை ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்களாகி விட்டனர். அடுத்து மற்றொரு நடிகை மகள் ஹீரோயின் ஆகியிருக்கிறார். கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

லிசி, பிரியதர்ஷன் மகள் கல்யாணிதான் தற்போது ஹீரோயினாகியிருக்கிறார். தமிழில் அறிமுகமாக ஒன்றிரண்டு வாய்ப்புகள் வந்தபோதும் முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். விக்ரம் கே.குமார் இயக்கிய ஹலோ படத்தில் அகில் அகினேனி ஜோடியாக நடித்தார் கல்யாணி.

அடுத்து சர்வானந்த் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். பாலிவுட், மல்லுவுட் நடிகைகள் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமாக உள்ளனர். அதிக சம்பளம் ஒரு காரணமாக இருந்தாலும் அங்கு நடித்து ஹிட்டாகிவிட்டால் மற்ற மொழி படங்கள் தன்னால் தேடிவரும் என்பது அவர்கள் எண்ணமாக உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா