Untitled Document
May 10, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
படக்குழு மீது பாய்ந்த பார்வதி!
[Tuesday 2017-10-17 08:00]

அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். தற்போது மலையாளத்தில் பெண் இயக்குனர் ரோஷ்னி தினகர் இயக்கும்

இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார் பிருத்விராஜ். இந்நிலையில் பட ஹீரோயின் பார்வதி திடீரென்று படக் குழு மீது பாய்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது: பிருத்விராஜ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யானது. அதை எங்களால் நிரூபிக்க முடியும். இது மிருகத்தனமான செயல். பிருத்விராஜ் கால்ஷீட் தேதி தர மறுக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. அதேசமயம் இது போன்ற உண்மைக்கு மாறான விஷயங்களை மீடியாக்களும் பெரிதுபடுத்துகின்றன.

இத்தனைக்கும் பிருத்விராஜ் கண்ணிய மாக அமைதி காத்து வருகிறார். எந்த வகையில் வம்பிழுத்தாலும் அது தவறு. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்க்கும் அதே சமயம் ஆண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை பற்றியும் ஏன் நான் பேசக்கூடாது. எந்தவொரு அமைப்பின் சார்பாகவும் இதை நான் பேசவில்லை. மை ஸ்டோரி பட டீமுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். எந்தநேரத்தில் படப் பிடிப்பு ெதாடங்குவதாக இருந்தாலும் உடனே அதுபற்றி தெரிவிப்போம் என்கின்றனர்.

ஆனால் எந்த தேதியில் படப்பிடிப்பு நடக்கும் என்பதுபற்றி உறுதியாக எதுவும் சொல்வ தில்லை. படப்பிடிப்பு தொடங்குவதுபற்றி குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னதாகவாவது தகவல் தெரிவிக்க வேண்டும். முதல்கட்ட படப்பிடிப்பு அவசர சூழலில் நடந்ததால் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டு நாங்கள் உறுதுணையாக பணியாற்றினோம். அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டை கேட்கும் போது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா