Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாரிசில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்வு! Top News
[Monday 2016-01-18 18:00]

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு , செந்தனி தமிழ்ச்சங்கம் 93 இணைந்து நடாத்திய பொங்கல் விழா செந்தனி போர்த்துபறி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவினி சுர் ஓர் மாநகர சபை உறுப்பினர் டேவிட் பாப்ர் (David Fabre) மற்றும் பிரான்சு மூதாளர் அவை உறுப்பினர், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து பொங்கலை ஆரம்பித்துவைத்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான பொங்கல் நிகழ்வைத்தொடர்ந்து பிரமுகர்கள் அனைவரும் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்கில் மங்கள விளக்கேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தவில் நாதசுர வாத்திய இசைக்கச்சேரி நிகழ்வை அலங்கரித்திருந்தன.

செந்தனி தமிழ்ச்சோலை மாணவர்களின் புஸ்பாஞ்சலி, ஆதிபராசக்கதி நாட்டியப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம், சிலம்பாட்டம், செவ்றோன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கோலாட்டம், ரான்சி தமிழ்ச்சோலை வழங்கிய வில்லுப்பாட்டு, சார்சல் தமிழ்ச்சோலை மாணவர்களின் வேப்பிலை நடனம், பொமினி தமிழ் சோலை மாணவர்களின் கும்மிநடனம், சிறப்பு பட்டிமன்றம் (தமிழ் இனி பொங்குமா? இல்லை மங்கி மறையுமா?), கிராமிய நடனம், லாக்கூர் நெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் சிறப்பு நாடகம், ஒல்னே சுபுவா தமிழ்சோலை மாணவியின் பாம்பு நடனம், ஒல்னே சுபுவா மாணவிகளின் கிராமிய நடனம் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தன. நிகழ்வில் அறிவிப்பாளர் குருபரன் அவர்கள் நிழ்வினை அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் சிறப்புரையை தமிழின உணர்வாளர் கேசாநந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய நிகழ்வானது இளம் தலைமுறைக்காகவே செய்யப்படுகின்றது. அவர்கள் இதனை உள்வாங்கி நாளை இந்த நிகழ்வுகளை எடுத்துச்செல்லவேண்டும். இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்கவேண்டும் அதாவது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வரலாறை பாடமாக ஊட்டவேண்டும் என்பதாக அவருடைய உரை அமைந்திருந்தது. நன்றி உரையைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு கண்டன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா