Untitled Document
May 21, 2024 [GMT]
டிரான் அலசை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! - சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி.
[Tuesday 2024-04-30 05:00]


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  கண்டித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

  

குற்றவாளிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவது குற்றமில்லை சரியான விடயத்திற்காக உங்கள் கரங்களில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்த தயங்கவேண்டாம் நாங்கள் உங்களிற்கு ஆதரவாகயிருப்போம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து குறித்து ஆழ்ந்த கரிசனையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது இலங்கையின் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளிற்கும் குற்றவியல் நீதி அமைப்புமுறையை வழிநடத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கும் முரணாணது எனவும் தெரிவித்துள்ளது.

தவறிழைத்தவர்களிற்கு அபராதம் விதிப்பது உட்பட நீதியை வழங்குவது இலங்கை அரசமைப்பின் ஆணையின்படி முற்றுமுழுதாக நீதித்துறையின் நியாயாதிக்கத்திற்குள் வருகின்றது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறான நடவடிக்கைகளின் உரிய நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் சட்டத்திற்கு ஏற்ப நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத படுகொலைகள் பொலிஸ் தடுப்பில் மரணங்கள் சட்ட அமுலாக்கல் பிரிவினரின் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ள நிலையில் நீதிவழங்குதல் தீர்ப்பளித்தல் தண்டனை என்பன நீதித்துறையின் கண்காணிப்பிற்கு அப்பாற்றபட்டவை அவற்றை கண்மூடித்தனமாக முன்னெடுக்கலாம் என்ற எண்ணத்தை அமைச்சர் டிரான் அலஸின் கூற்று உருவாக்குகின்றது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் தொடர்ச்சியாக பொறுப்புணர்வு அற்ற விதத்தில் கண்மூடித்தனமாக மற்றும் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை அவற்றை திருத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதுஎனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பின் காவலன் என்ற அடிப்படையில் மக்களின் நலன்களிற்கு சேவையாற்றவேண்டிய தேவை அமைச்சருக்குள்ளது -எனினும் தொடர்ச்சியாக தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை அவர் வெளியிடுவது பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சட்ட அமுலாக்கல் தரப்பினரை தவறாக வழிநடத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அமைச்சர் தனது கூற்றை உடனடியாக வாபஸ்பெறவேண்டும் என இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் கோருவதுடன் அமைச்சர் தனது தொடர்ச்சியான அறிக்கைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதால் அவரை உடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது.

  
   Bookmark and Share Seithy.com



சரணடைந்த குழந்தைகள் எங்கே? - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி.
[Tuesday 2024-05-21 06:00]

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.



இலங்கையில் இன்று துக்கதினம்!
[Tuesday 2024-05-21 06:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வற்றாப்பளை சென்ற உழவு இயந்திரம் விபத்து - சிறுவன் பலி, 5 பேர் படுகாயம்.
[Tuesday 2024-05-21 06:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த கூட சர்வதேசம் தவறிவிட்டது!
[Tuesday 2024-05-21 06:00]

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை தமது வீடுகளிலோ, பகிரங்க தளங்களிலோ நடத்த தமிழ் மக்களுக்கு ஐநா அங்கீகரித்த உரிமை இருக்கிறது என்ற குறைந்த பட்ச விஷயத்தை கூட இலங்கை ஆட்சியாளர்களின் தலைகளில் திட்டவட்டமாக புகுத்த சர்வதேச சமூகம் இதுவரை தவறி உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.



ஜனாதிபதியுடன் இணக்கம் ஏற்படவில்லை! - என்கிறார் சாகர காரியவசம்.
[Tuesday 2024-05-21 06:00]

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



இலங்கையில் அறிமுகமாகிறது ஒக்டேன் 100 சூப்பர் பெற்றோல்!
[Tuesday 2024-05-21 06:00]

வரலாற்றில் முதன்முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.



சீரற்ற வானிலை - 19,234 பேர் பாதிப்பு!
[Tuesday 2024-05-21 06:00]

தற்போதைய சீரற்ற வானிலையினால் நாட்டின் 07 மாவட்டங்களில் 19,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 4,786 ஆகும். 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 1,140 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



களுத்துறையில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு! - ஒருவர் பலி.
[Tuesday 2024-05-21 06:00]

களுத்துறை - கட்டுக்குருந்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.



அளவெட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2024-05-21 06:00]

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை 4:00மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.



ரம்புக்வெலவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Tuesday 2024-05-21 06:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



யுவதியின் உயிரைக் குடித்த இராணுவ வாகனம்! - பிறந்த நாளில் சோகம். Top News
[Monday 2024-05-20 16:00]

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே இன்று நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.



சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு பெற்று டென்மார்க் சென்ற பெண் யாழ்ப்பாணம் திரும்பிய போது கைது!
[Monday 2024-05-20 16:00]

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ரைசியின் மரணம் - ரணில் அதிர்ச்சி!
[Monday 2024-05-20 16:00]

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



கஞ்சி பரிமாறியதற்கான கைதானவர்கள் இன்று விடுதலை!
[Monday 2024-05-20 16:00]

சம்பூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.



ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்கர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Monday 2024-05-20 16:00]

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



விஜயதாச தலைவராகச் செயற்படத் தடை!
[Monday 2024-05-20 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விஜயதாச ராஜபக்ஷவுக்கும், பொதுச் செயலாளராக செயற்படுவதற்கு கீர்த்தி உடவத்தவுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



ஈரான் ஜனாதிபதியின் மரணம் - மஹிந்த, நாமல் இரங்கல்!
[Monday 2024-05-20 16:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது நாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்பு மரபு என்றென்றும் நினைவுகூரப்படட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



டயானாவைக் காணவில்லை! - நீதிமன்றத்தில் கைவிரித்த சிஐடி.
[Monday 2024-05-20 16:00]

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.



வடக்கில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குகிறார் ஜனாதிபதி!
[Monday 2024-05-20 16:00]

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.



காலநிலை மோசம் - 10,299 பேர் பாதிப்பு!
[Monday 2024-05-20 16:00]

காலநிலை காரணமாக 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா