Untitled Document
May 7, 2024 [GMT]
சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]


தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  

யாழ்ப்பாணம் நகர பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துடன் சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.

கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



விசா குழப்பம் - அமைச்சரவை அதிரடி முடிவு!
[Tuesday 2024-05-07 05:00]

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கட்டுநாயக்கவில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய இளைஞன் மீது சட்ட நடவடிக்கை பாயும்!
[Tuesday 2024-05-07 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சண்டித்தனம் காட்டி, தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்திய இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.



விசா விவகாரம் பிணை முறி மோசடியை விட மோசமானது!
[Tuesday 2024-05-07 05:00]

எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.



விமான நிலைய கட்டமைப்பை ஆராய சிங்கப்பூர் அதிகாரிகள் வருகின்றனர்!
[Tuesday 2024-05-07 05:00]

இலங்கையின் விமான நிலையங்களின் கட்டமைப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டமைப்பையும் ஆராய்வதற்கு சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகார சபையின் அதிகாரிகள் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவள்ளனர். சிங்கப்பூர் போல் மாற வேண்டும் என்று கனவு கண்டால் மாத்திரம் போதாது அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.



தாயை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது!
[Tuesday 2024-05-07 05:00]

தெல்லிப்பழையில் உயிரிழந்த பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து 4ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.



பரபரப்பை ஏற்படுத்திய பதவி விலகல் கடிதம்!
[Tuesday 2024-05-07 05:00]

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக சமூக ஊடகங்களில் கடிதமொன்று பகிரப்பட்டுள்ளது. இந்த கடிதம் போலியானது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதில் வழங்கியுள்ளார்.



பிரித்தானிய உயரதிகாரி அனுரவுடன் சந்திப்பு!
[Tuesday 2024-05-07 05:00]

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.



புத்தூரில் மரத்தில் இருந்து விழுந்த ஒருவர் மரணம்!
[Tuesday 2024-05-07 05:00]

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பரில் வெளியாகும்!
[Tuesday 2024-05-07 05:00]

நேற்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



கோடரியால் மருமகன் தாக்கினார் - மாமனார் மரணம்!
[Tuesday 2024-05-07 05:00]

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.



கிளிநொச்சி டிப்போச் சந்தியில் பூங்கா அமைக்கும் இராணுவம்! முன்னணி எதிர்ப்பு.
[Monday 2024-05-06 16:00]

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.



வங்காள விரிகுாவில் உருவாகிறது தாழமுக்கம்?
[Monday 2024-05-06 16:00]

எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாக ஓய்வுபெற்ற மூத்த மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.



3 மாதங்களில் 8200 கோடி ரூபா இலாபம்! - மின்கட்டணத்தை 20 வீதம் குறைக்க பரிந்துரை.
[Monday 2024-05-06 16:00]

மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் ரூ. 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.



தெல்லிப்பழையில் வீடியோ கேமுக்கு அடிமையான மகன் - தாயைக் கொலை செய்தாரா?
[Monday 2024-05-06 16:00]

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் கெனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.



ஆளுநர்களையும் ஊழியர்களையும் அடைத்து வைத்த வேலையற்ற பட்டதாரிகள் கைது!
[Monday 2024-05-06 16:00]

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சுற்றுலாப் பயணிகள் வருகை திடீர் வீழ்ச்சி!
[Monday 2024-05-06 16:00]

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



செங்கலடியில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்த பஸ்! - 5 பேர் காயம். Top News
[Monday 2024-05-06 16:00]

மட்டக்களப்பு - செங்கலடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



30.5 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!
[Monday 2024-05-06 16:00]

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .



சரத் பொன்சேகா தொடர்பான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு!
[Monday 2024-05-06 16:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்கி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.



கிராம அலுவலர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
[Monday 2024-05-06 16:00]

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா