Untitled Document
May 4, 2024 [GMT]
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]


 இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின்  மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

  

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதானால் கட்சி உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்! - தருணம் பார்த்து காத்திருக்கிறார்.
[Saturday 2024-05-04 05:00]

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.



13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றி சஜித் எம்மை அழைத்துக் கூற வேண்டும்!
[Saturday 2024-05-04 05:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால், அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! Top News
[Saturday 2024-05-04 05:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.



புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த சீனா அழுத்தம்!
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.



திருகோணமலையில் இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.



10 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்காத பாடங்களுக்கு அனுமதி அட்டை!
[Saturday 2024-05-04 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான தனிப்பட்ட பரீட்சார்த்திகள் , தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.



சிஐடியிடம் மைத்திரி நேற்றும் வாக்குமூலம்!
[Saturday 2024-05-04 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஐசுடன் இருவர் கைது!
[Saturday 2024-05-04 05:00]

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2024-05-04 05:00]

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



ஊடக சுதந்திர பட்டியலில் 15 இடங்கள் சறுக்கியது இலங்கை!
[Friday 2024-05-03 17:00]

2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்ட நிலையில், 15 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.



ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு!
[Friday 2024-05-03 17:00]

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.



தமிழீழ இலட்சியத்தில் எவரும், எவரையும் தோற்கடிக்க முடியாது!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், இவ்வாறானதொரு ஊடக சந்திப்பை மேற்கொள்ள வேண்டி இருப்பது தொடர்பில் - நான், உண்மையிலேயே பெரும் கவலை அடைகிறேன். ஆனாலும் எங்களுடைய மௌனம் தமிழினத்துக்கு மேலும் பேராபத்தை ஏற்படுத்திவிடலாம் என்னும் உந்துதலின் காரணமாக உண்மைகளை உரைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.



அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்!
[Friday 2024-05-03 17:00]

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



மனோ கணேசன்- பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் சந்திப்பு!
[Friday 2024-05-03 17:00]

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது, பிரான்சிய தூதுவருடன், தூதரக துணை தலைமை அதிகாரி திருமதி மாரி நொயெல்லா தூரிசும் உடன் இருந்தார்.



ஈழ வேந்தன்: காலத்தை முன்னுணர்ந்த தமிழ்த் தேசியப் போராளி!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழத் தேசிய விடுதலைப்போராளியும். நாட கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் ஐயா அவர்கள் காலம் ஆகிய செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு சிரம் தாழ்த்தி எமது மரியாதை வணக்கத்தை தெரிவிப்பதுடன், அவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.



எரிவாயு விலைகள் போட்டிக்கு குறைப்பு!
[Friday 2024-05-03 17:00]

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று அறிவித்தார்.



நெடுங்கேணியில் கணவன் கொலை?- மனைவி உயிர் மாய்ப்பு!
[Friday 2024-05-03 17:00]

வவுனியா - நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை 37 வயதான அவரது மனைவி பரமேஸ்வரி, நஞ்சருந்திய நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



வீட்டு வாடகை செலுத்தவில்லை- ரம்புக்வெல்லவின் நாடாளுமன்ற சம்பளத்தில் பிடித்தம் செய்யுமாறு அறிவிப்பு!
[Friday 2024-05-03 17:00]

அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை- மறுக்கிறார் ரணதுங்க.
[Friday 2024-05-03 16:00]

தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா