Untitled Document
May 7, 2024 [GMT]
புதிய அரசியலமைப்பு குறித்து ஜனவரியில் விவாதம்!
[Tuesday 2016-12-13 08:00]

புதிய அரசியல் அமைப்பு குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் விவாதம் நடத்தப்பட  உள்ளதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சீன அரசாங்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சீன அரசாங்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

  

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் அரசியல் அமைப்பு குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்படும். முதல் தடவையாக இலங்கையில் அரசியல் அமைப்பு குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் அரசியல் அமைப்பு பற்றிய விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. தற்போது நாம் என்ன செய்கின்றோம் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வழியுண்டு. நாடாளுமன்றில் விவாதம் நடத்தி ஒவ்வொரு தரப்பின் கருத்துக்களையும் உள்வாங்கி அரசியல் அமைப்பினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் அமைப்பு அமைப்பது தொடர்பில் ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும், அவை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தொண்டமானாறில் கிணற்றில் வயோதிபரின் சடலம்!
[Monday 2023-02-13 17:00]

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த ஆரன் பாலசிங்கம் (வயது- 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



20 பவுண் , 5 இலட்சம் ரூபா கொள்ளை! - முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை!
[Wednesday 2023-02-01 17:00]

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 20 பவுண் நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளார்.



வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்!
[Sunday 2022-12-04 16:00]

இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.



பணிப்பெண்ணுக்குப் பிறந்த சிசுவைக் கொன்ற வைத்தியர் சிக்கினார்!
[Tuesday 2022-07-26 18:00]

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!
[Thursday 2022-06-16 17:00]

யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மஹிந்தவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு - 4ஆம் திகதி விசாரணை!
[Friday 2022-06-10 16:00]

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
[Friday 2022-06-10 16:00]

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



லொக்டவுணுக்கு மத்தியிலும் விபத்துகளில் 2,470 பேர் பலி!
[Sunday 2022-02-20 09:00]

கடந்த ஆண்டு கொவிட் அச்சுறுத்தலால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் 22,000 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, 2,470 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



யாழ்ப்பாண ஆலய சிலைகளை ஆட்களை வைத்து கொள்ளையடித்த கொழும்பு வர்த்தகர்!
[Saturday 2021-12-25 18:00]

யாழ்ப்பாணத்தில் சிலைகளை கடத்தி விற்று வந்த இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நேற்றும் 18 பேர் பலி!
[Sunday 2021-10-24 18:00]

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 10 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.



மன்னாரில் 15 பேர் ட்ரோனிடம் சிக்கினர்!
[Sunday 2021-05-30 19:00]

மன்னாரில், இன்று முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் கமெரா கண்காணிப்பின் மூலம், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை, விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி, மன்னார் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர்.



கனகராயன்குளத்தில் முதியவர் அடித்துக் கொலை!
[Saturday 2020-08-22 17:00]

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டொன்றின் அருகில் சடலம் இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



வவுனியா விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
[Monday 2020-05-25 19:00]

வவுனியா- ரயில் நிலைய வீதியில் கடந்த 15 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



வயல்வெளியில் கிடந்த கஞ்சா பொதி!
[Thursday 2019-12-26 16:00]

யாழ்ப்பாணம், நாச்சிஅம்மன் கோவில் அருகே உள்ள வயலில் இருந்து 6 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.யாழ். விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா பொதியின் நிறை 6 கிலோ 540 கிராம் என்றும் இதன் பெறுமதி, 1 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



45 பவுண் நகைகள் அபகரிப்பு!
[Saturday 2019-08-31 16:00]

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகளைத் திருடி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க பொலிஸார் தவறியதால், சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.



துப்பாக்கி, குண்டுகளுடன் கார் சிக்கியது! - நால்வர் கைது
[Saturday 2019-05-25 09:00]

பிலியந்தலை, கடிகம பிரதேசத்தில் ஆயுதங்கள், கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை நேற்று காலை சோதனை செய்ததாகவும், அதிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதோடு, இச்சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.



ஆவா குழுவினர் 9 பேருக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2018-12-19 18:00]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா நேற்று உத்தரவிட்டார்.



மாட்டினார் இராணுவ மேஜர்!
[Friday 2018-10-26 08:00]

ரி56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல பிரதேசத்தில் வேன் ஒன்றில் ரி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 2,958 கைப்பற்றப்பட்டதோடு 9 மில்லி மீற்றர் வகை தோட்டாக்கள் 32 உம் கைப்பற்றப்பட்டன.



சாவகச்சேரியில் சிசுவின் சடலம் மீட்பு!
[Wednesday 2018-03-07 19:00]

சாவகச்சேரிப் பகுதியில் ன்று காலை சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் காணியொன்றுக்குள் இருந்தே குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறொரு பிரதேசத்திலிருந்து சிசுவின் சடலம் குறித்த பகுதியில் கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



அத்துமீறிய 8 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2017-10-17 18:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா